169 3. எதிரிலே வந்ததே உமது யோகம்-நாம் இருவோரும் இசைந்ததே காந்தர்வ விவாகம் சதிசெய்யேன் எனக்கும் உமக்கும்ஏக ராசி சம்மதி ஆனதே நல்லமுகூர்த்த வாசி கதகதென் றெரியுதே காமாக்கினி வீசி கட்டிக்கொள்ளும் என்று தில்லுமுல்லும் பேசி (வந்தா) ------ ஸ்ரீராமருக்கும் சூர்ப்பநகைக்கும் சம்வாதம் விருத்தம்-9 வந்தசூர்ப் பநகை தன்னை மதித்தரா கவனும் நோக்கி அந்தமா னிடவர் பெண்ணோ அரம்பையோ அறிவோம் என்றும் தொந்தமா தவத்தோர் காணச் சொல்லறிந் துரைப்பாள் என்றும் தந்தவார்த் தைக்கு வார்த்தை சரிசரி எதிர்சொல் வாளே திபதை-4 மோகனராகம் ஆதிதாளம் 1. செம்பவள வல்லிபோல எங்கேவந்தாய் வந்த சேதி என்ன சொல்வாய் பெண்பாவாய் கும்பிடப் போனதெய்வம் எதிர்வந்த தென்றாசை கொண்டு காணவந்தேன் என்கோவே 2. ஆசை வில்லின்மேலோ மரவுரிமேலோ தின்னும் அருங்கனி மேலோ சொல் பெண்பாவாய் ஆசைவில்லின் மேலில்லை மரவுரி மேலில்லைஉன் அதரக்கனிமேல் உண்டு என்கோவே 3. அதரக் கனிகொடுக்க தவசிகட்கடுக்குமோ அடுக்காத வார்த்தை சொன்னாய் பெண்பாவாய் அதரக்கனி வதிஷ்டர் அருந்ததி கீகலையோ அவர் தவசியல்லவோ என்கோவே 4. தவசியது செய்தாலும் பிரம்மகுலம் உன்குலம் க்ஷத்திரிய குலம் என்குலம் பெண்பாவாய் இவையவை என்பதென்ன காமுகருக்குக் கண்ட இடத்தில் என்பது பொய்யோ என்கோவே |