பக்கம் எண் :

233

அவ்வேலையின் முனிந்தான் முனிந்தரற்றலன்அவ்
வெவ்வேலரக்கன் விடலாம்படை வேறுகாணான்
இவ்வேலையினே இவன்இன்னுயிர் உண்பென்என்னா
செவ்வேபிழையா நெடுவாள் உறைதீர்த் தெறிந்தான்

வலியின்தலை தோற்றிலன் மாற்றருந் தெய்வவாளால்
நலியும்தலை என்றதன்றியும் வாழ்க்கைநாளும்
மெலியும் கடைசென்றுளது ஆகலின் விண்ணின்வேந்தன்
குலிசம் எறியச்சிறையற்றது ஓர்குன்றின் வீழ்ந்தான்
         (சடாயுஉயிர்நீத்தபடலம் 17, 22, 23, 24, 27, 28, 34, 38, 40, 42) 

சடாயுவிழவே சீதைபுலம்பல்

விருத்தம்-22 - தரு-13

வெள்கும் அரக்கன் நெடுவிண்புக ஆர்த்து மிக்கான்
தொள்கின் தலைஎய்திய மான்எனச் சோர்ந்து நைவாள்
உள்கும் உயிர்க்கும் உயங்கும் ஒருசார்வு காணாள்
கொள்கொம் பொடியக்கொடி வீழ்ந்ததுபோல் குலைந்தாள்

வன்துணையுளன் எனவந்த மன்னனும்
பொன்றினன் எனக்கினிப் புகல்என் என்கின்றாள்
இன்துணைப் பிரிந்திரிந்து இன்னல் எய்திய
அன்றிலம் படைஎன அரற்றினாள் அரோ

அல்லல் உற்றேனைவந்து அஞ்சல் என்றஇந்
நல்லவன் தோற்பதே நரகன் வெல்வதே
வெல்வதும் பாவமோ வேதம் பொய்க்குமோ
இல்லையோ அறம்என இரங்கி ஏங்கினாள்

நாணிலேன் உரைகொடு நடந்த நம்பிமீர்
நீள்நிலை அறநெறி நின்றுளோர்க் கெலாம்
ஆணியை உந்தையர்க்கு அமைந்த அன்பனை
காணிய வம்மெனக் கலங்கி விம்மினாள்

கற்பழியாமை என்கடமை ஆயினும்
பொற்பழியா வலம்பொருந்தும் போர்வலான்
வில்பழியுண்டது வினையினேன் வந்த
இல்பழியுண்டது என்றிரங்கி ஏங்கினாள்