285 நாயகன் அல்லன் நும்மை நனிபயந்து எடுத்து நல்கும் தாய்என் இனிது பேணித் தாங்குதி தாங்குவாரை ஆயது தன்மையெனும் அறவரம்பு இகவாவண்ணம் தீயன வந்தபோது சுடுதியால் தீமையோரை இறத்தலும் பிறத்தல் தானும் என்பன இரண்டும் யாண்டும் திறத்தினி நோக்கின் செய்தவினைதரத் தெரிந்த அன்றே புறத்தினி உரைப்பதென்னே பூவின்மேல் புனிதற்கேனும் அறத்தினது இறுதி வாழ்நாட் கிறுதிஅஃது அறிதிஅன்ப (அரசியற்படலம் 6, 8-15) ஸ்ரீராமர் கார்காலம் கண்டு சீதையை நினைந்து இரங்கல் விருத்தம்-13-திபதை-6 இன்னகைச் சனகியைப் பிரிந்த ஏந்தல்மேல் மன்மதன் மலர்க்கணை எய்தினான் என பொன்னெடுங் குன்றின்மேல் பொழிந்த தாரைகள் மின்னொடும் துவன்றின மேகராசியே வாரேர் முலையாளை மறைக்குநர்வாழ் ஊரே அறியேன் உயிரோ டுழல்வேன் நீரே உடையாய் அருள்நின் இலையோ காரே எனதாவி கலக்குதியோ வெப்பார் நெடுமின்னின் எயிற்றை வெகுண்டு எப்பாலும் விசும்பின் இருண் டெழுவாய் அப்பாதக வஞ்ச அரக்கரையே ஒப்பாய் உயிர்கொண்டாவது ஓவலையோ அயில்ஏய் விழியார் விளைஆர் அமுதின் குயிலேய் மொழியார்க் கொணராய், கொடியாய் துயிலேன் ஒருவேன் உயிர்சோர்வு உணர்வாய் மயிலே எனை நீவலியா டுதியோ மழை வாடையொடுஆடி வலிந்துயிர்மேல் நுழைவாய் மலர்வாய் நொடியாய், கொடியே இழைவாள் நுதலாள் இடைபோல் இடையே குழைவாய் எனது ஆவி குழைக்குதியே |