406 விபீஷணர் இந்திரசித்தை விலக்கி ராவணனுக்குப் புத்திகூறல் விருத்தம்-3 கும்பகர்ணன் இந்தமொழி சொன்ன பின்பு குதித்திந்திர சித்தெழுந்தான் எனதுகையில் வெம்பும் பிரமாஸ்திரமும் நாகபாசமும் தானும் வீண்போமாயின் அதைநீ காண்பாய் என்றான் வம்பு சொன்னாய் பயலேநீ போடா நாளை வருங்காரியம் அறியாய் என்று அவனைத்தள்ளி தம்பிவிபீ ஷணன் அண்ணேன் உனக்கிதெல்லாம் சதிஎன்றான் கேட்பாய்என் மதிஎன்றானே தரு-2 சாவேரிராகம் ஆதிதாளம் பல்லவி ராகவன்பகை ராவணாஒருக்காலும் நமக்காமோ அண்ணேன் பழி சுமக்காதே (ராக) அநுபல்லவி ஏகனாய் அந்த மூவரும் தசரத ராமன் என்று வந்தாரே நாமெங்கே போவோம் (ராக) சரணங்கள் 1. அலைகடல்சூழ்இலங் காபுரிமேலே-வந்தொருக்காலே அளவறு ராட்சதர் மலைகளைப்போலவே-மண்டினத்தாலே அலைந்தோம்-மெத்த உலைந்தோம்-மேனி குலைந்தோம்-நிலை கலைந்தோம்-என்றுதேவர் காலமே ஓலமே செயஆதி மூலமே கோலமே ஆகிவந்து கிளையும் விளையும் முளையும் களையவே வலக்கை தந்து நிலத்தில்வந் தவதரித்த (ராக) 2. பாதகி தங்கையால் சீதையை வினைமூளா-அடசண்டாளா பன்னகசாலை யோடுன் இருபது தோள்களால்-பாவத்துக்காளா |