பக்கம் எண் :

585

  வரும்விதி வந்ததென்றால் படும்விதி படவேணும்
     மாட்டோம் என்றாலும்வி              டாதே-ராமராமா

6. அண்னானும் என்சொல்லைச் சத்துருக்கனும் கேளாமல்
     அரசாள மனம்மங்கி                 றானே
  அண்ணன் அழைத்துப் போன லட்சுமணன்போல் என்னையும்
     அழைத்துப் போ கூடஎன்கி           றானே-ராமராமா

7. பூமிநெருப்பில் விழும் விழவேண்டாம் என்றொரு
     புத்திமதி சொல்லநில்                 லாயோ
  சாமிபின் போனநெஞ்சே வருவானோ வாரானோ
     சற்றே நீவந்து சொல்                 லாயோ-ராமராமா

8. பொடித்தவனந்தனிலே எவருடன் சண்டையோ
     புரோகிதரே சொல்லொ              ணாதோ
  நடுப்படையிற் போனாலும் வடுப்படாமல் திரும்பும்
     நாயகன் வரத்தடை                  ஏதோ-ராமராமா

9. பருவங்கள் பதினாலும் தவம்செய்தென்ன கண்டேன்
     படைத்தேனே இந்த அப              வாதம்
  பெருமாள் சென்றவழியில் புல்லாய் முளைத்தாலும்
     பெறலாமே ஆண்டவன்               பாதம்-ராமராமா

10. அரசனையும் காணேன் அரசுக்கரசாய் நின்ற
     அண்ணனையும் காணேன்நான்எம்      மாத்திரம்
  பரதன் என்ற பேரை பதர்என்று சொல்லலாம்
     பாவிநான் அதற்கல்லோ              பாத்திரம்-ராமராமா

------

சத்துருக்கன் அரசாட்சிக்கு உடன்படாமை

விருத்தம்-112

பரதனிந்த விதம்புலம்பிச் சாமிதெரிசனங்காணாப் பாவிநானே
சரதமினித் தீப்பாய் வேன் உலகாள்வாய் சத்துருக்கா தம்பி என்றான்
விரவியகா திலதுபோய் நெருப்பாகச் சுடஅவனும் வீழ்ந்துசோர்ந்தான்
நரகமன்றோ உனக்குப்பின் நிலமென்றான் எனகென்னநலம் என்றானே