பக்கம் எண் :

586

தரு-89

புன்னாகவராளி ராகம்                          ஆதிதாளம்

பல்லவி

இதற்கோநான் ஆளானேன் இதற்கோ அண்ணாவே       (இத)

அநுபல்லவி

சதிக்குள் சத்துருக்கனா      வாயென்றழைத்திட்டாயே
சாமிபரதா என்னைக்        கைநழுவ விட்டாயே        (இத)

சரணங்கள்

1. பூமிஆளச்சொல்லி என்               னைத்தானே-விட்டுப்
     போனால் என்னாகுமோ           கோமானே
  ராமன் முகமும் உன்முகமும்           கண்டுநானே
     இரண்டாட்டில் ஊட்டின குட்டிபோல் ஆனேனே    (இதற்)

2. ஒருவன் கானகத்தில்                 ஏகவும்-அவன்
     உடனொரு தம்பிதுணை           போகவும்
  ஒருதம்பி யானநீ நெருப்பிலே         மூழ்கவும்
     ஒருதம்பி எனதுயிர்வல்லுயி        ராகவும்       (இதற்)

3. எனக்கு மாத்திரம் உடல்            கெட்டியோ-உன்பின்
     இருந்துல காளாவிட்டால்         நஷ்டியோ
  உனக்குப்பின் வாராமல் எனக்கொரு   வெட்டியோ
     உன்னுயிரிலும் என்தன் உயிர்கருப் பட்டியோ (இதற்)

------

அக்கினியில் விழும் பரதரைக் கௌசலைஅம்மன்

தடுத்துக் கூறுதல்

விருத்தம்-113

    வாடியிவ்வா றழுததம்பிக் கிரங்கான் நான்போய்
          மாள்வனெனின் இவண்புவியை ஆள்வன் என்று
    கூடிய மந்திரிமாரும் ஊர்உள் ளாரும்
          குலைந் தலறப்பரதன்தீ வளர்க்கச் சொன்னான்