பக்கம் எண் :

606

  சூழ்ந்து பலமுனிவர்      சாந்திமந்திரஞ்சொல்லி
     சுபந்தரு நவக்கிரக செபம்             கொடுக்க

     பூசுரர் உடைகளை வேசியர்கள்         உடுக்க
     வேசியர் உடைகளை பூசுரர்கள்         உடுக்க
     பூசிய பொடிவகை வேசியர்            இறைக்க
     வேசியர் மிசையதை வேதியர்கள்       இறைக்க

     பொன் போலும் சட்டமிட்ட            மாலிகை
    மின்போலும் சுற்றில்வைத்த            பாலிகை
    பொங்கரம் சுற்றிலும்                 பளபளென
    எங்கேயும் சித்திரம்                  தளதளென

    புத்தமு தத்தினை நிகர்த்த             மொழிச்சியர்
    அத்திர சத்திகள் ஒத்த               விழிச்சியர்
    பொற்கடகக்கையில் அப்பி             அடிக்கடி
    கற்பகப் புட்பம் இறைத்து             சதிப்படி

போராட வேகுயில்கள்      நேர்பாடவே மயில்கள்
போலாடவே தகவும்        கோலாடவே மிகவும்
பூமிகளும் பாமிகளும்       காமிகளு மேமகிழப்
பூதாதி தரும்போக         வேதாவுடனே லோக
மாதாஎனும் வைபோக       சீதாசமேதனாக        (மகு)

3. அங்கதன் அருகிலுடை    வாள்பிடிக்க
  சுக்ரீவன் கைலாகுதந்து    தோள்பிடிக்க
  அஞ்சி அனுமான்சாமி     தாள்பிடிக்க
  வந்தடைப்பம் சுமந்துமத   வேள்பிடிக்க

  அட்சய விவேகிஎனும்     லட்சுமணன் சத்துருக்கன்
     அருகினில் நின்று     கவரிகள் வீச
  பட்டமுள்ள சுமந்திரன்    எச்சரிக்கை என்றுசொல்ல
     பரதன் குடைபிடித்து   நயம் பேச
  அற்புதக்கு பேரன்வந்து   பொற்பணி திருத்தமணி
     அணிபணி கண்டுசூ    ரியன் கூச
  கற்பனை கடந்தராமன்     ஒப்பனை செய்திருமார்பில்
  களபச் சந்தனங்கள் சந்திரன் பூச

அருள்முகக் கமலமும்       அதிலிரு கமலமும்
இருகர கமலமும்           இருபத கமலமும்