792 இன்னுயிர்த் துணைவர்தம்மைக் காட்டினான் இருவர்தாளும் மன்னுயிர்க் குவமைகூறவந்தவர் வணக்கம் செய்தார் (மீட்சிப்படலம் 118, 119) நம்பியும் பரதனோடு நந்தியம்பதியை நண்ணி வம்பலர் கடையும்மாற்றி மயிர்வினை முற்றிமற்றைத் தம்பியரோடு தானும் தண்புனல் படிந்தபின்னர் உம்பரும் உகைகூர ஒப்பனை ஒப்பச்செய்தார் ஊழியின் இறுதிகாணும் வலியினது உயர்பொற்றேரின் ஏழுயர் மதமாஅன்ன இலக்குவன் கவிகை ஏந்தப் பாழிய மற்றைத் தம்பி பால்நிறக் கவரிபற்றப் பூழியை அடக்கும் கண்ணீர் பரதன்கோல் கொள்ளப் போனார் தேவரும் முனிவர்தாமும் திசைதொறும் மலர்கள்சிந்த ஓவலில் மாரிஏய்ப்ப எங்கணும் உதிர்ந்துவீங்கிக் கேவல மலராய் வேறோர் இடமின்றிக் கிடந்தஆற்றால் பூஎனும் நாமம் இன்றுஇவ் உலகிற்குப் பொருந்திற்றன்றே (திருமுடி சூட்டுபடலம் 1-3) பட்டாபிஷேக மண்டபம் பரதர் சோடித்தல் விருத்தம்-123 தரு-99 நான்முகத் தொருவன்ஏவ நயனறி மயனென்றோதும் நான்முகத்து ஓங்குகேள்வி நுணங்கியோன் வணங்குநெஞ்சன் கோல் முகத்தளந்துகுற்றம் செற்றுல கெல்லாம் கொள்ளும் மான்முகத் தொருவன் நன்னாள் மண்டபம் வயங்கக்கண்டான் (திருமுடி சூட்டுப்படலம் 13) ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் விருத்தம்-124 தரு-100 இந்திரகுருவும் அன்னார் எனையவர் என்னநின்ற மந்திர விதியினாரும் வசிட்டனும் வரைந்துவிட்டார் சந்திர கவிகை ஓங்கும் தயாதராமன் தாமச் சுந்தர மவுலிசூடும் ஓரையும் நாளும் தூக்கி |