பக்கம் எண் :

84 

என்பிள்ளை ராமன்          எட்டியோ
    நான்தா னென்ன            மட்டியோ
    வெட்டிப் போடுவேன்உன்னை                   (ராம)

------    

கைகேசியைக் கூனி கலைத்தல்

விருத்தம்-6 

துங்கமாம் அயோத்திஆளச் சொல்லிய ராம னுக்கே
    தங்கமா முடிகொ டாமல் சடைமுடி கொடுப்பேன் என்று
    பங்கமாய் கூனி முன்னாள் பகையினா லேகை கேசி
    மங்கையாள் எதிரே பின்னும் வார்த்தையால் கலைக்கின் றாளே. 

திபதை-2

அசாவேரி ராகம்                          ஆதிதாளம்

கண்ணிகள் 

1.    ராமன் முடி சூடுமென்ற பேய்மதி உனக்குவந்தது
             ஏதம்மா - என்ன - வாதம்மா - அடி
         சீமாட்டி உன்பிள்ளை பரதன் காமாட்டி ஆனானே என்ன
              செய்கையே - அம்மா - கைகையே

2.    உன்மகன் ஊர்க்கில்லாவேளை தன்மகனை முடிசூட்ட
             உன்னினாள் - கோசலை - எண்ணினாள் - அந்த
         மன்னவனும் அவள் சொன்ன வார்த்தை கடவாமலுன்னை
              வாதித்தான் - ஏதோ - போதித்தான் 

3.   கண்ணுள்ள போதல்லவோ கண்காட்சி என்பதறியாயோ
             கன்னியே - என்ன - உன்னியே - ஆர்க்கும்
        பண்ணிய பயிரில் அல்லவோ புண்ணியம் தெரியுமடி
             பாவியே - என்தன் - ஆவியே

    4.  ஓடம்விட்ட ஆறும் அடிச்சுடுமென்று சொல்லும் வார்த்தை
             உள்ளதோ - பெண்ணே - இல்லதோ - அதுபோல்
        ஈடழிந்துன் தாய்தந்தைமார் உன்னைவந் தடைந்த போதில்
             என்செய்வாய் - எவரைக் - கெஞ்சுவாய்