பக்கம் எண் :

நொண்டியின் வரலாறு15


    59, மேலானசொக்குப்பொடிப் போட்டு
            வீட்டுக்க பாடத்துப் பூட்டும் விட்டு
        நாலா வகையணியு மந்த
            நள்ளிருட் சாமத்திற் கொள்ளை கொண்டேன்

    60. கொள்ளையணிக ளெல்லாங் கட்டிக்
           கூட்டிமேன் மாராப்புப் போட்டுக் கொண்டேன்
       மெள்ளவெழுந்திருந்தே னந்த
           வீதிவிட்டேன் செஞ்சிப் பாதையிற் போய்

    61. போனேனிராவழியே கள்ளர்
           போர்கடந் தேன்கண்ண னூர்Oகடந்தேன்
       கூனாமதிதவழுஞ் செஞ்சிக்
           கோட்டைO கண்டேன் வாசற் பேட்டை கண்டேன்

    62. கண்டேன் பலதெருவு மந்தக்
          காவணமும் வீதியாவணமுங்
      கொண்டாடு மாரியம்மன் கோயிற்
          கோசிகன் போல்வந்த பூசிதனை

    63. கனமாயுறவுகொண் டேன் தோளிற்
         கட்டிக்கொடுவந்த பொட்டணத்தை
      மனதார் திடமறிந்தே வைத்து
         வைத்தங்குசோறு மமர்த்திக் கொண்டேன்

    64. மத்தியாபானங்கொடுப் பான்சோறும்
         வாய்ப்புடனே தரச் சாப்பிடுவேன்
       நித்தியகால முஞ்சுகித் தேனவ
         னிச்சித்தபிள்ளைபோல் வைத்துக் கொண்டான்

                     -------------