87. போனவரகந் தோறும் போய்ப்பார்த்தேன் புலியில்லாமனையினி லெலியதுபோல் நானதெல்லா மறிந்தே விடுதிக்குள் நண்ணினேன் மனதிலொன் றெண்ணினேனே 88. கால விசேடத்தினால் நமக்கினிக் கைக்கான சிறையொன்றுஞ் சிக்காதென்றே சுலூபுகான் ராசன் பாளையத்திற் றுரக மொன்றுகொண்டு வரநினைந்தேன் 89. கோதடிதானெடுத்தேன் கஞ்சாக் குடுக்கையொடு படுக்குந் தடுக்குடனே மாதடிகோடாலி குண்டா மயிற்பீலி விருதங்கி சக்கரமுடன் 90. கம்பளிக்கயிறுடனே யிடுப்பினிற் கந்தையுங்கமர்பந்துங் * கட்டிக் கொண்டேன் வெம்புலிபோற் சினந்தேன் றவசிகள் வேடம்போல் வெண்ணீறையும் பூசிக் கொண்டேன் 91. ஆண்டிகள் வேடங்கொண்டேன் எண்ணாமல் அடர்ந்தேறிப் பாளையத்தில் நடந்தேனே வேண்டிய வீதிகண்டே னவரவர் விடுதிகளையுங் கண்டேன் சடுதியிலே 92. கடைத்தலைவீதியி லேமணியக் காரியக் காரர்தலை யாரிகளுந் திடத்தொடு மிருக்கக் கண்டேன் துரைகள்ஒ சீறு * களிருக்குங்கூ டாரங்கண்டேன் |