99. கிறு கிறென்றே மயங்கிக் கோதடியிற் கிடந்தேன் சூரியனு மடைந்தானே நறைமலர்த் தொடைமார்பன் ஏசப்ப நாயக்கன் புண்ணியக் காயத்தினால் 100. போசனக் காரர்வந்து வண்டகம் போஞ்செய ஆவுரேயென்றார் * வாஞ்சையுடன் ஏசிலாதுடனெழுந் தேன் பாத்திர மெடுத்தேன் பந்தியிற்சென் றடுத்தேனே 101. கூண்டிருந்த சனஞ்செய் தேன் பசியினிற் குறைந்திடும் வயிறது நிறைந்திடவே வேண்டிய சோற்றையுண்டேன் அதில் வயிறு வீங்கின கண்களுந் தூங்கினனே 102. விடிந்தபின் னெழுந்திருந் தேன் பாளைய வீதியுமவரவர் சேதிகளும் உடந்தையாப்பார்த்தறிந் தேனங்கங் குறவுகொண்டவரவர் துறவுகண்டேன் 103. கோப்புகள் தனையுங்கண்டேன் பட்டாணிக் கூட்டமுநாட்டமுங் குறியுங்கண்டேன் காப்புகள் தனையுங்கண்டேன் றலையாரிக் காவலும்படுக்கையுங் களமுங்கண்டேன் 104. அறிந்திடும் பழையவர் போ லாளொடும் ஆளாகப்பதினைந்து நாள் திரிந்தேன் மறந்திகழ் சுலூபுகா னேறிய வாசியி லுத்தமத் தேசிதனை |