பக்கம் எண் :

28 செய்தக்காதி நொண்டி நாடகம்

    135. எல்லோருமொருமுக மாக் கூடிவந்
            திருக்கிற சமுகத்தி னெருக்கத்திலே
         நில்லாமல் துரத்துமென் பார்கன் மஞ்செய்
            நெறிகேடன் முதுகினி லறையுமென்பார்

     136. வெட்டவாளுறைவிடு வார் கோபித்து
            மிதிப்பார் சவுக்கெடுத்து வீசுமென்பார்
         கிட்டவா வெனச் சொல்லு வாரேதென்று
            கேட்பார் நல்ல பலன் கிடைத்த தென்பார்

     137. ஆரிவன் காணுமென் பார் நேற்றெல்லாம்
            ஆண்டியாய்த்திரிந்தவன் காணு மென்பார்
         பாரிவன் துணிவையென் பாரளவிட்டுப்
            பார்க்கப்படாதிவன்றன் மார்க்கமென்பார்

     138. உடைந்தையாய்த்திரிந்தானென் பாருளவறிந்
            தொட்டைக்காட்டின் முழக்கொம்பு வெட்டு வானென்பார்
        திடந்தனைப்பாருமென் பார் மணலையுந்
           திரிப்பான் கல்லினா ருரிப்பானென்பார்

     139. களவுசெய் பாதக னைத் துரைமக்கள்
            கண்ணாரப் பார்க்கவுந்தா னொண்ணாதென்பார்
         பிளவு செய்தெறியுமென் பார் கோபிக்கும்
            பேரைப் பொறுபொறென் றேயுரைத்து

     140. மரகதமலையதி பன்தாவூதுகான்
            மறுமொழிபேசாமல் முறுவல் செய்து
         நரபதிசுலூபு கான்ச முகத்தில்
            நடத்து மிவனையப்பாற் கடத்துமென்றார்