147. சொன்ன கட்டளைப்படியே யடியேனைத் துடித்திடக் கையைக்கட்டிப் பிடித்துக் கொண்டு முன்னும் பின்னுமாகவே சவுக்கடி மூட்டிக் கடைத்தெருவிற் கூட்டிவந்து 148. காதின் முகத்தினி லறைந்து காதுக்குங் கழுத்துக்கு மெருக்கிலை மாலையிட்டு வீதிகடோறுநடத்தியே கண்ணிற்கண்டோர் விலக்கவுங் கேளாம லலக்கழித்து 149. கோட்டைக்கப்புற நடத்தி யவரவர் குழுவுங்கடைத் தெருவும் வழியும்விட்டுப் பேட்டைத்தெருவிலிருத் தியம் பட்டப் பிரமனை யழைப்பித்தா ரரண்மனை யார் 150. கருவி பிரமனெடுத் துக் கூர்மையைக் காட்டிக்கைச் சாணையிற் றீட்டிக் கொண்டு வரையுங் குறியுங் குறித்தே சுறுக்கினில் வலக்காலு மிடக்கையும் வாங்கினானே 151. ஆக்கினைக் களரிக்குள்ளே யங்ஙனே யயர்ந்து களைத்தேனங்கு மூர்ச்சை வந்து நாக்கொடு வாய்குள றியுடலும் நடுங்கிப் பதை பதைத்துள் ளொடுங்கி விட்டேன் 152. துலங்கிய சோலை மலைதனிலுள்ள தோழரு டனிருந்து வாழாமல் அலங்கித மதுரையிற் போய்ச் சொக்கரை யடுத்த பலனமக்குக் கிடைத்ததென்றே |