159. வந்துநின்றேதெனவே யெனையந்த மண்டலாதிபதி கண்டிரங்கி யெந்தவூரெந்தத் தேயம் நீயாரென் றியம்பினார் வார்த்தையெல்லா நயம்பெறவே 160. வார்த்தையெல்லாங் கேட்டே வளச்சோலை மலைக்கள்ளனென்று நான் தலத்தைச் சொன்னேன் பார்த்தவர் சவ்வாசென் றேயெலுமிச்சம் பழத்துக்கு மெண்ணெய்க்கும் பணங்கொடுத்தார் 161. ஏதுமற்ற பரதேசியிவனைக்கை யேற்றுப் பரிகரித்துப் பார்த்திடென்றே தீதற்ற பண்டிதற் குநூறுபொன் றிட்டமாச் சம்பளமுங் கட்டளையிட்டே 162. காயத்தை யாற்றிக்கொண்டே கீழக் கரையிற் பெரியதம்பி மரைக்காயன் வாயலத் தலத்தில் வந்தா லுன்னுடைய வறுமை தெளிந்திடுமென் றுறுதி சொல்லி 163. கனதுரை மாமுநயினா னென்மேற் கருணைபுரிந்தெழுந் தருளியபின் அனைவோருங் கூண்டிருந்தே யெண்ணெய் காய்ச்சி யாயசத்ரத் தொத்தலிட்டுக் காயமுங்கட்டி 164. பத்தியந் தவறாமற் போசனமும் பசியறிந்தே கொடுத்தார் ருசி பெறவே முத்திரைப் பதமா கக்கெடுவிட்டு மூன்று நாளைக்குள்ளாக் கடுப்பகற்றி |