பக்கம் எண் :

34 செய்தக்காதி நொண்டி நாடகம்

    171. வர்த்தக ரேர்மணி யான் பெரிய தம்பி
           மரக்காய ராசரவர் வாயலில் வந்து
        சுத்தவீரரண சூரன் செய்தக் காதி
           துரையெங்கே யென்றேன் கீழக் கரையிலென்றார்

     172. அத்தலந்தனைக் கடந் துகண்மாயும்
           அளத்தையுங் கண்டுதிருக் குளத்தில் வந்து
        வைத்த பனைமரத்துக்குங் காலுக்கும்
           வாருக் கட்டிக்கொண்டேனந்த மோருக் குளத்தில்

     173. கணத்தினி லெழுந்திருந் தேன்பாலையாறுங்
            கடந்தே னொண்டி நொண்டி நடந்தேனே
         மணவச்சேரி வந்ததனைக் கண்டேன் சாலையும்
            வாய்ப்பான சிங்காரத் தோப்புங் கண்டேன்

     174. கொடிக்கால் மணலுங்கண் டேன் செம்பொன்
            குடம்வைத்த வேகாந்தர் மடமுங் கண்டேன்
         கடைத்தலை வீதிகண்டேன் லெப்பை மார்*
            *காலிமாரோதும் பள்ளி வாயல் கண்டேன்

     175. விருதுமன்னியர் கண் டன்காயலில்
            விசயரகுநாதப் பெரிய தம்பி
         கருதலர் திறையளக்கும் வாயிலைக்
            கண்டேன் மனங்களி கொண்டே னே

     176. சந்திக்க வந்திருக் குந்துரை மக்கள்
            தானா பதியான ஞானாதிகளும்
         மந்திரிப் பிள்ளைமாரும் வில்வரும்
            வடுகரு மிடுகரும் வன்னிய ரும்