பக்கம் எண் :

36 செய்தக்காதி நொண்டி நாடகம்

    183. வரிசைச்செய்யிது நயினான்O சிருஷ்டித்த
            வாலமன்மதனொரு பாலிருக்க
        அரசர்க டொழுசரணன் குட்டி
            யாலிப் பிள்ளைO யொரு பாலிருக்க

     184. மாதர்கள் மதரூ ப னெனவரு
            மாப்பிள்ளை மாமுநயி னார்ப்பிள்ளை யும்
         பூதலம்புகழ் சயிலன் சேகுக் கன்றுப்
            பூபதி யுடனொரு புறத்திருக்க

     185. சந்தமுத்தமிழ்தெரி யுங்கல்வித்
            தலைவர் மகிழ்உமறுப்O புலவருடன்
        செந்தமிழ்க் கந்தசுவாமிப்Oபுலவனுஞ்
           சீராட்டு நற்றமிழ்ப் பாராட்டவே

     186. மத்தளமுங் கைத்தாள முந் தம்பூரும்*
            வாத்தியங்கள் கொண்டு சிலர் கீர்த்த னஞ்செய
         முத்தமிழ்க் கவிவா ணர் சிலர்திசை
            முதுதமிழ்க் கவிஞர்கள் பதமி்சைக் க

     187. இலங்கிய நில மக ளுந்தனசம்பத்
            திலட்சுமியும் வீரமுய ரிலட்சுமியுங்
         கலைமக ளொடுமிவர் கள் சுவாமியெங்
            கத்தனெனப் புகழ்ந்து நித்தமு நிற் க

     188. துரைமக்களருகிருக்க மறுமன்யர்
            சூழ்ந்துகை வாய்புதைத்துத் தாழ்ந்து நிற்கத்
         திரைசுற்று மணித்தவிசில் சருவந்து
            சிறந்திட கிளை வந்து நிறைந்திருக் க