219. போற்றித்துவாவோத வே பரவசமாய்ப் புத்திமயங்கி யொரு நித்திரை செய்தேன் ஏத்துந்துவாக்கபூலா யெனக்குமுன் னிருந்தகாலுங்கையும் வளர்ந்தன வே 220. சுறுக்குட னெழுந்திருந் தேன்* சுபுகா னல்லாவென்றிறையைச் சுக்கூறு* செய்தேன் குறிப்புடனதிசயித் தேன் ஈமான்* கொண்டபலன் கைம்மேலே கண்டோமென் றே 221. காயலின்மகரா சன் செய்தக் காதியைத்திசை நோக்கிக் கையெடுத் தேன் தாயெனவுபசரித்த மாமு நயினார்ப்பிள்ளை தன்னையு நினைந்தே தாழ்ச்சிசெய் தேன். 222. அறபுக்கரையுமக்க மு மரச ரவர்வழி யவர்குல முறைவா ழி குறைசிக்கிளையும்* வாழி செய்யிதுக் கூட்டமும்வாழி புறுக்கான்வாழி 223. ஆழிசூழ் புவிவா ழி செருவி லரியதுரைச்சேது பதி* வாழி கீழக்க ரைவா ழி சிங்கக் கேசச் சதக்கத்துல் லாவாழி 224. தீனவர் குலம்வா ழி செய்தக்காதி செல்வமுங் கல்வியும் தினம்வாழி ஆனமதி மூன்று மழை பெய்தே அனைவோரும் வாழிறப்பில் ஆலமீ னே. * தந்தன தந்தனனா தனனா தானன தானன தானான செய்தக்காதி நொண்டி நாடகம் முற்றிற்று |