செய்தக்காதி நொண்டி நாடகம் குறிப்புரை 1.நொண்டி நாடகத்தின் இலக்கணம் முதலிய விவரங்களை நொண்டி நாடகம் நூலாராய்ச்சி 7-9 பக்கங்களில் காண்க. 2.வகுதைச் செய்தக்காதி, இதன் விவரத்தைத் திருமண வாழ்த்துக்குறிப்பில் பார்க்க. 3.தருமகளார் கலீபா அபூபக்று அவர்களின் திருமகள் ஆயிஷா நாயகம். 4.கலீபா உமறு அவர்களின்மகன் அபூஷஹ்மா மதுபானம் செய்த குற்றத்திற்காக மார்க்க விதிப்படி தண்டிக்கப் பட்டதால் உயிர் துறந்தார் என்று மௌலானா ஷிப்லி நுஃமானி எழுதுகிறார். See. அல்-பாரூக்Ed.1908. 5.செல்லைக் குடைதரித்தோர்-மேகத்தைக்குடைபிடித்தவர் ;நபி நாயகம் அவர்கள் வெளியே செல்லும் போது வானத்திலுள்ள மேகம் குடையைப் போல அவர்கள் தலைக்கு மேல் தவழ்ந்துவந்து சூரியவெப்பத்தினின்றும் காப்பாற்றியதைக் குறித்தவாறு. 6.சூகைமுலை யருந்தினோர் :நபி அவர்கள் திருஅவதாரம் செய்து சிலகாலம் சென்றபின் ஹலீமா என்ற செவிலித்தாயைத் தீர்மானம் செய்து நபியவர்களுக்குப் பால் கொடுக்கும் படி ஏற்பாடாயிற்று.ஹலிமா அவர்களுக்கு ஒருதனம் சூகையாயிருந்தது.நபிஅவர்களுக்குப் பால் கொடுக்க ஏற்பாடானவுடன் சூகையாயிருந்த தனம் பருத்துப் பால் பெருகியது என்ற கதையை விளக்கியபடி. 7.மதியை யழைத்த நபி :இவ் வடிகளால் நபிநாயகம் அவர்கள் திமிஷ்கு தேசத்துஅரசன் ஹபீபு என்பவனது வேண்டுகோளின் படி அமாவாசை அன்று சந்திரன் தோன்றும்படி செய்து, பின்னர்க் காட்டிய அற்புதச் செயலைக் குறிப்பிடுகிறார். |