பக்கம் எண் :

நொண்டியின் சிறப்பு5


             தரு-இராகம்: மோகனம் - தாளம்: ஆதி

     1. இந்நி லம்புகழ்ப்ர தாபன் விசய
            இரகுநாத பெரிய தம்பி மகிபன்
       கன்னாவு தாரனையன் புகழ்பாடி நொண்டி
            களரிக்கு ளாடக்கங் கணங்கட்டி னானே.
      
     2. அந்தமார் சருபந் து*ங்கட்டி மெய்யி
            லகலாத்து*ச் சகலாத்து* டகலாவுங் கட்டிக்
        கந்தக்குப் பாயமுங் கட்டி நொண்டி
            களரிக்கு ளாடக்கங் கணங்கட்டி னானே.

    3. பரிசையொடு பெரியகத்தி கொண்டு நொண்டி
            பாசிப் பருவமுள்ள மீசையுந் திருத்திக்
      கருதலர் வாயடங்கக் குத்தி நொண்டி
            களரிக்கு ளாடக்கங் கணங்கட்டி னானே.

    4. கண்ணாடி போற்பரிசை பதித்து நொண்டி
           கால்வீசி வட்டமிட்டு மேன்மீசை யுந்திருத்தி
       சுண்ணாம்புக் கல்லுப்பல்லுக் காட்டி நொண்டி
          தொந்தோமென்றாடிக் கொள்ளத் துசங்கட்டி னானே.

    5. மெய்யிற்குங் குமவாடை பூசி நொண்டி
          விருதான வழிக்கெல்லாம் மகத்துவம் பேசி
       கையிற்குஞ் சமுமெடுத்து வீசி நொண்டி
          களிரிக்கு ளாடக்கங் கணங்கட்டி னானே.

    6. புதுமலர்க்குங் குமத்தார் சூடி யருள்கொடைப்
          போகன செய்தக்காதி புகழைக் கொண்டாடிக்
       கதையொடு காவியங் கள்பாடி நொண்டி
          களரிக்கு ளாடக்கங் கணங்கட்டி னானே.