7. ஆலித்த வீரதண்டை கட்டி நொண்டி யதற் கண்டையிற் பலகறை வெண்டய முங்கட்டிக் காலுக்குப் பணையமுங் கட்டி நொண்டி களரிக்கு ளாடக்கங் கணங்கட்டி னானே. 8. ஆனைமாறாட்டஞ் செய்யுந் தீரன் இசுலா மானவ*ர்க்கெல்லாமொரு வருமைக் குமாரன் கானிறை குங்குமப் பூந்தாரன் நொண்டி களரிக்கு ளாடக்கங் கணங்கட்டி னானே. 9. குபிரான* நொண்டிகளை நகுவேன் என்றும் கோதற்ற தீனவர்கள்* பாதத்திற் புகுவேன் அபிராம மற்றுநெறி பறைவேன் நசு றானிகள்* மார்பில்முளை யாணிக ளறைவேன் 10. வாதாடும் பேர்களைத் தடுப்பேன் எதிர் மாற்றலர் மூக்கிற்றும்பைச் சாற்றையே விடுப்பேன் வேதாந்த குருவைக்கை யெடுப்பேன் கள்ள விச்சைக்குப் பத்திரட்டிப் பிச்சையுங் கொடுப்பேன். 11. வல்லாண்மை மந்த்ரவித்தைக் குள்ளன் எங்கும் வலைபுகுந்த நரிபோல வந்திருக்கு முள்ளன் கல்லிலே நாருரிக்குங் கள்ளன் நொண்டி களரிக்கு ளாடக்கங் கணங்கட்டி னானே. 12. எத்தலமு மெச்சுபிர சண்டன வீர தீரர்பட் டாணிகள்* ராவுத்தர்* கண்டன் கர்த்தனைத் தொழுவோர்க்குத் தொண்டன் நொண்டி களரிக்கு ளாடக்கங் கணங்கட்டி னானே. |