பக்கம் எண் :

8 செய்தக்காதி நொண்டி நாடகம்

    17. நானாவிதக்கள வுமாய
            நஞ்சங்களாகிய வஞ்சனையு
       மானாபரன்சே மன்கற்று
           வைத்துப்பதுக்கிய புத்தகமும்

   18.  அகலாதவித்தையெல் லாம்படித்
           தாளானேனா னெல்லாக் கோளாறும்
       வகையாய்த்தெரிந்தபின்பு நம்மை
           வாழ்விக்குஞ்சொக்கரைச் சேவிக்கவே

   19. வேணுமெனக்கரு தித்தமிழ்
          மீனவன்கூடலிOற் போனபின்பு
       தாணுதிரியம்பக னே நீதான்
          தம்பமென்றேகொடிக் கம்பமுன்னே

   20. முன்னோனைத் தெண்டனிட் டேனந்த
            மூவர்பிரான்Oகோயிற் றேவடியாள்
      பொன்னாரும் பூண்முலை யாள்கஞ்சப்
            போதலர்சண்பகக் கோதையுடன்

    21. கோதையபிராமி முத்துக்
           குங்குமக் கோதையாள் சங்குமுத்துச்
       சீதைசிவகாமி பொன்னின்
           சின்னச்சவுந்தரி யன்னமுத்து

   22.  முத்துமாலை மீனாட்சியவள்
            முன்னடந்தாள்நான் பின்னடந்தேன்
       கத்தூரிவாணுதலா ளென்னைக்
            கண்டாள்திருமணி மண்டபத்தில்