கோடிபோல
இணைந்து நிற்பதாலும் ஒன்றையறுத்தாலும் பின்னும் அது முளைத்து
வருவதாலும் அவற்றைக் கொடி என்றார். கரக்கொடி - கைகளாகிய கொடிகள்.
ஆயிரங் கைகளையும் வெட்டி வீ்ழ்த்தியது திருமால் செயல். அதனால் கொடிகட்கு
அரிவாளாகி என்றார். ஈரங்கொல்லி - வண்ணான். கஞ்சனுக் குரிய
வண்ணான் வாழ்நாளைக் கெடுத்தார் என்பது குறித்து "விதியாகி"
என்றார். உரிஞ்சுதறி - உடம்பு தேய்க்கும் தூண். பசுக்கட்குத் தூணாகித்
தாங்கினன் என்பது கருத்து. (12)
ஆசிரிய
வணக்கம்
சீராருந் திரிசிரா மலையின்வளர்ந்
தெக்காலுஞ் சிறப்பி
னோங்கும்
ஏராருங் கலைக்கடன்முற் றுண்டாங்கு
நின்றெழீஇ யென்வி
வேக
வாராருந் தடம்நிரம்ப மனப்பறம்பின்
இனியதமிழ் மாரி
பெய்த
பேராரு மீனாட்சி சுந்தரதே
சிகமுகிலைப் பேணி
வாழ்வாம்.
(சொ - ள.்) சீர் ஆரும் திரிசிரா மலையில் வளர்ந்து எக்காலும்
சிறப்பின்
ஒங்கும் - சிறப்புப் பொருந்திய திரிசிரா மலை என்னும் இடத்தில் வளர்ந்து
எப்பொழுதும் மேன்மையால் உயர்ந்த; ஏர் ஆரும் கலை கடல் முற்று உண்டு
ஆங்கு நின்று எழீஇ-அழகு மிக்க பல கலைகளாகிய கடலை முழுவதும் குடித்து
அவ்விடத்து நின்றும் எழுந்து; என் விவேகம் வார் ஆரும் தடம் நிரம்ப மனம்
பறப்பில் இனிய தமிழ் மாரிபெய்து - என் அறிவாகிய நீண்ட தடாகம் நிறையும்படி
மனமாகிய மலையின் மீது இனிய தமிழாகிய மழையைப் பொழிந்த; பேர் ஆரும்
மீனாட்சி சுந்தர தேசிகமுகிலை பேணிவாழ்வோம் - பெருமையாற் சிறந்த மீனாட்சி
சுந்தர தேசிகராகிய மேகத்தை மனமார விரும்பி யாம் வாழ்வாம்.
(வி - ம்) ஆசிரியர் வணக்கங் கூறுகின்றார் நூலாசிரியர். திரிசிரபுரம்
மீனாட்சி
சுந்தரம் பிள்ளை என்பவர் இவருக்குத் தமிழ் நூல் பயிற்றிய ஆசிரியர் எனத்
தோன்றுகிறது. திரிசிரா மலையில் வளர்ந்து கலைக் கடலை உண்டு என் மனமாகிய
மலையில் தமிழ் மழையைப் பொழிந்து அறிவாகிய பொய்கையை நிரப்பிய மீனாட்சி
சுந்தரமாகிய மேகத்தை விரும்பி நாம் வாழ்வோம் என்று கூட்டுக. இது
உருவகவணி. கலையைக் கடலாகவும்,
|
|
|
|