|
அணிகலங்கள்; தட மறுகு உற்றுமுற்ற துன்னிய
இருளை மேய இடம் அகன்ற தெருக்களி்்்ல்
மிகவும் நிறைந்து (நகர் முழுவதும்) செறிந்த இருளினை (ஒளியினால்) நீக்குதலால்;
துறக்கம் என்று அமரர் நாளும் மன்னிய - தம் பொன்னுலகமே என நினைத்து
தேவர்கள் எந்நாளும் நிறைந்து நெருங்க; இமைக்கும் சீர்த்தி அவந்தி மாநகர் உண்டு
- விளங்கும் புகழினையுடைய அவந்திமா நகரமென்ற ஒரு பட்டினம் உண்டு.
(வி - ம்.) பாங்கர்-பக்கம். அந்நலார்-அழகிய பெண்கள். அம்+நலார்.
நல்லார்
நலார் எனக் குறைந்தது: தொகுத்தல் விகாரம். துறக்கம்-பொன்னுலகம். இரவு பகல்
தோன்றாத உலகம் அது. மங்கையர் ஊடி வெறுத்து எறிந்த மணிக்கலங்கள் மறுகிற்
கி்டந்து ஒளிவிட அதுகண்டு தேவர்கள் தம் பொன்னுலகம் என்றே நினைத்துவந்து
குடிபுகுந்து நிலைபெற்று வாழ்வர். அவ்வாறு வாழத்தக்க சிறப்பமைந்தது அவந்தி என்ற
நகர் என்று சிறப்புக் கூறினர் எனக் காண்க. மணிக்கலங்கள்-மணிகள் பதித்த ஆபரணங்கள்;
அழகிய ஆபரணங்கள் எனவும் கூறலாம். மறுகு-தெரு.
(3)
செந்தமிழ் பழுத்த நாவின்
தீ்ஞ்சுவைப்
புலவ ரானும்
அந்தமில் சேட னாலும்
அறைதர முடியாச்
சீரச்
சுந்தர நகர்வ ளப்பஞ்
சொலவெனக்
கடங்கா வேனுஞ்
சிந்தையிற் களிப்புத் தூண்டச்
சிறிதணிந்
துரைப்பல் கேண்மோ.
(சொ - ள்.) செந்தமிழ் பழுத்த நாவின் தீ சுவை புலவரானும் அந்தம்இல்
சேடனானும் அறைதர முடியாசீர் - இனிய சுவையினையுடைய செந்தமிழ்க் கவிதைகள்
கனிந்த நாவினையுடைய புலவர்களாலும், முடிவில்லாத (புலமையையும் ஆயிரம்
நாவினையும் உடைய) ஆதிசேடனாலும் முற்றக் கூறமுடியாத சிறப்பமைந்த; அ சுந்தர
நகர் வளப்பம் சொல எனக்கு அடங்கா ஏனும் - அந்த அழகிய நகரத்தின் வளமையினைக்
கூறுதற்கு என் புலமைக்கு அளவுபடாதெனினும்; சிந்தையில் களிப்பு தூண்ட சிறிது
அணிந்து உரைப்பல் - மனத்திடை எழும் மகிழ்ச்சியால் தூண்டப்பெற்ற வேட்கையால்
ஒரு சிறிதளவு கூறுவேன் ; கேண்மோ-நீ அதனைக் கேட்டிடுக.
|