அதன்பின்
பலர் புகழ்ந்து ஏத்தும் நந்தகோபாலன் பனிமதி ஆனனம் அசோதை-
அதன் பின்னர்ப் பலரும் புகழ்ந்து போற்றும் நந்தகோபன் தண்ணிய முழுமதி போலும்
முகமுடைய அசோதை (ஆகிய இருவருடைய ), அலர் மனம் களிப்ப ஆடுஉறூஉம்
பாலன் ஆகிய - மலர்ந்த உள்ளம் மகிழ்ச்சி யடைய விளையாடுகின்ற குழந்தை
வடிவினனாகிய: ஐயனே - கண்ணபிரானே, நல்நாவலர் பராவுஉறு பல்வளங்களும்
உயிர்க்கு வழங்கி - நல்ல நாவலர் துதிக்கும்படி பல்வளங்களையும் உயிர்களுக்குக்
கொடுத்து; ஆண்டு அருள் செய்வன் - ஆட்கொண்டு அருள் செய்யக் கடவன்.
(வி - ம்.) ஒருத்திக்கு மகனாகப் பிறந்து மற்றொருத்தி மகனாக
யாவர்க்கும்
தோன்றும்படி வளர்ந்து, பெற்ற தாய் பிள்ளையைக் கண்டு மனமகிழ்ச்சியடைய வழியின்றி
மற்றொரு தாயே கண்டுகளிக்கும்படி பல விளையாடல் புரிந்தது கண்ணன் அரிய
செயல் ஆதலால் "தேவகிக்கு நன்மகனாய் அவதரித்து நந்த கோபாலன்; அசோதை
மனங்களிப்ப ஆடுறூஉம் பாலன் ஆகிய ஐயனே" என்றார். இத்தகைய அருள்செயல்
புரிந்த கண்ணன் காக்குங் கடவுள் ஆதலால் அவன் உயிர்களுக்குப் பல்வளங்களை
வழங்கியாண்டருள் செய்வான். அஃது அவனுக்குக் கடமையாம் என்பது குறிப்பு.
மலர்விழி-மலர்போன்ற விழி: உவமைத்தொகை: தாமரை மலர் எனக் கொள்ளினும்
பொருந்தும். ஆடுறூஉம்: இன்னிசை யளபெடை. அன்று ஏ : அசை. நன்றேஎனப்
பிரித்து நன்றாகவே அருள் செய்வன் எனக் கொள்வதும் பொருந்தும்.
(4)
குடம்புரை செருத்தற் கோவுமந் தணருங்
குறைவறு சுகம்பெற
வென்றும்
இடங்கொள்பல் லுலகும் மிகுசுகம் உறுக
என்றுமா ரியருமோ
னியருந்
திடம்பட எண்ணும் எண்புரந் திடுக
திரைக் கடல்
கிழியமத் தெறிந்து
மடம்படும் அவுணர்ச் சவட்டியொள் ளமுதம்
வானவர்க் கூட்டிய
முதலே.
(சொ - ள்.) திரைகடல் கிழிய மத்தெறிந்து, மடம்படும் அவுணர்
சவட்டி -
அலையெறியுந் திருப்பாற்கடல் கலங்கும்படி (மந்தர மலையாகிய) மத்தினாற் கடைந்து
மடமை மிக்க அவுணரை ஒழித்து; ஒள் அமுதம் வானவர்க்கு ஊட்டிய முதல் -
ஒள்ளிய அமுதத்தை வானுறை தேவர்க்கு உண்ணக் கொடுத்த முதல்வனாகிய திருமால்;
குடம் புரை செருத்தல் கோவும்
|
|
|
|