பதிப்புரை | உயர்தனிச் செம்மொழி என நந்நாட்டறிஞர்களே யன்றி எந்நாட்டறிஞர்களும் எடுத்துக்கூறிப் புகழ்ந்து பாராட்டும் அருமையும் பெருமையும் வாய்ந்தது தமிழ் மொழியாம். நம் மொழியாகிய இம்மொழியிற் காணப்படும் நூல்கள் இலக்கணம், இலக்கியம் என இரு பிரிவாம். இவற்றிற் சங்க இலக்கியம் எனச் சாற்றப் பாடுவன பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு ஆகிய நூல்கள். பிற்கால இலக்கியங்களைப் பேரிலக்கியம், சிற்றிலக்கியம் எனப் பிரித்தனர் சான்றோர். பெரியபுராணம், கம்பராமாயணம் போன்ற புராணங்களும், நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், நீதிநூல் முதலிய நூல்களும், வரலாற்று நூல்களும், பொருள் நூல்களும், இன்ப நூல்களும், வீட்டு நெறி விளக்கும் நூல்களும் பிறவும் பேரிலக்கியம் என்ற பிரிவில் அடங்கும். புலவர்கள் தெய்வத்தின்மீதும், வள்ளல்கள்மீதும் அருளையும் பொருளையும் பெறுவது கருதிப் பாடிய சிறு நூல்கள் (பிரபந்தங்கள்) அனைத்தும் சிற்றிலக்கியம் எனக் கொள்க. | பிள்ளைத்தமிழ், கோவை, உலா, அந்தாதி, தூது, கலம்பகம், பரணி இவை போல்வன கடவுளைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட நூல்கள் அருள் கருதிப் பாடியவை. மக்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டவை யாவும் பொருள் கருதிப் பாடியவையே. இவை புலவர் தந்நலங்கருதிப் பாடியவையாதலாற் சிற்றிலக்கியம் எனப் பேர்பெற்றன. இளமைப் பருவத்திலிருந்தே உலகிற் காணப்படும் பொருள்கள் ஒவ்வொன்றையும் கண்டு கண்டு அவற்றியல்பினை யறிந்து தெளிந்தவரே பின்னர்ப் பொருளறிஞர் எனப் புகழப்படுவர். அது போலத் தமிழிற் காணப்படும் சிற்றிலக்கியங்கள் பேரிலக்கியங்களின் இயல்பறிந்து தெளிந்தவரே மொழியறிஞரின் முதல்வராவர். நம் தமி்ழ் மொழியின் அருமை பெருமை யறிவதற்குச் சிற்றிலக்கி | | |
|
|