"ஆலெங்கே யங்கே யரும்பறவை யாற்றுயிலும் மாலெங்கே யங்கே மலர்மடந்தை - கோலஞ்சேர் செங்கே தகைமணக்குஞ் செங்குன்றை யூரனெங்கே அங்கே யிரவலரெல் லாம்" | என்பது அப்பாடல். பழுமரம் எங்கேயிருந்தாலும் பறவைகள் அங்குச் செல்லும்; ஆலிலையி லறிதுயில் கொள்ளும் திருமால் இருக்குமிடத்தில் திருமகளிருப்பாள்; அழகுடைய நல்ல தாழைமலர் மணம் வீசும்; செங்குன்றைநகர் வள்ளல் இருக்குமிடத்தில் இரவலர் யாவரும் வந்திருப்பர் என்பது அதன் பொருள். இஃது எவ்வளவு எளிய இனிய நடையாகத் தோன்றுகிறது! இக்கவியில் எங்கே யங்கே என்ற சொற்கள் எவ்வளவு இனிமை பயக்கின்றன. சொற் பொருட்பின்வருநிலை யணியமைந்தது இது. இன்னும் இவர் வாழ்நாளில் பணப்பற்றுள்ள முடையவரைக் (உலோபியர்) கண்டார்! "இவர் ஏன் உலகத்தில் பிறந்து வளர்ந்து வாழ்கிறார்? இவரை என்ன பயன் கருதிக் கடவுள் படைத்தார்?" என்று ஆராய்ந்தார். அப்போது தம் கையைப் பார்த்தார். ஐந்து விரல்களையும் ஆய்ந்தார். நடுவிரல் பயன்படாமல் பெரிதாக வளர்ந்து நிற்கிறதே ஏன்? இவ்விரலைப் படைத்தவரும் கடவுள் தாமே! ஏன் படைத்தார் என நமக்கே தோன்றவில்லையே! நம் வழிபடுங் கடவுளாகிய முருகனிடமே இதனைக் கூறி முறையிடுவோம்" என்று நினைந்து முறையிட்டார். அக்கவி இது: "சுண்ணாம்பு தீட்டநல் லாள்காட்ட மோதிரஞ் சூட்டமலர்க் கண்ணாரைக் கூட்ட விரனான் கிருக்கக் கதிர்க்கம்பிபோல் எண்ணா நடுவிரற் கேதா முலோபருக் கேதுகண்டாய் கண்ணார் நுதலண்ணல் சேய்வணி காசெந்தில் காத்தவனே." | இதில் விரனான்கும் செய்யுஞ் சிறந்த தொழில் விளக்கப்பட்டிருப்பது காண்க. பெருவிரல் வெற்றிலையிற் சுண்ணாம்பு தடவுவது; அடுத்த விரல் ஆளைச் சுட்டிக் காட்டுவது; நான்காவது விரல் மோதிரம் அணியப்படுவது; சுண்டுவிரல் திருமணத்தில் காதலி கைப்பற்றுவது. இதனை யாய்ந்தபோது நடுவிரல் பயனின்றி நிற்கிறது எனக் |