பக்கம் எண் :

36அழகர் கிள்ளைவிடு தூது


கின்றன. தனிப்பாடற்றிரட்டில் வந்துள்ள கவிகள் யாவும் சிவபெருமானையும் உமையையும் குறித்தவையாகவே காணப்படுகின்றன. இந்நூல் மட்டும் வைணவ சமயத்தைக் குறித்ததென அறிகின்றோம். இந்நூலை இவர் இயற்றியதற்குக் காரணம் ஏதேனும் இருத்தல்வேண்டும். அது நமக்கு விளங்கவில்லை. சைவ சமயத்தினர் ஆகிய இவர் அழகரைப் போற்றியிருக்கும் முறையை யாய்ந்தால் சமய வேறுபாடமையாத உள்ளத்தவர் எனவே சாற்றத்தகும். இவர் இயற்றிய மதுரை மும்மணிக்கோவையில் 16, 20 ஆகிய எண்ணமைந்த பாடல் இரண்டும் "மேகவிடு தூது", "பூவைவிடு தூது" என்ற பொருளமைந்தனவா யிருப்பதாலும் "அழகர் கிள்ளைவிடு தூது" என்ற இந்நூலும், "தென்றல்விடு தூது" என்ற நூலும் இவர் இயற்றியிருப்பதாலும் தூதுப் பொருளமைந்த பாடல் பாடுவதிற் பெரிதும் ஆர்வமுடையவர் இவர் எனக் கோடல் பொருத்தமாகும்.

   நாகம கூளப்ப நாயகன் காதல் பாடிய சுப்பிரதீப கவிராயருக்கும் இவருக்கும் மனவேறுபாடு தோன்றியதால் ஒருவரையொருவர் குறைவாகப் பாடிய செய்யுள் சில உண்டென்று கூறுவர். சுப்பிரதீபக் கவிராயர், வீரமாமுனிவருக்குத் தமிழ் கற்பி்த்தவர் என்று வரலாறு கூறுவதால் அவ்வீரமாமுனிவர் காலமே இவர் காலமென கொள்ளலாம். வீரமாமுனிவர் காலம் கி.பி. 1680-1746.