5 | கொண்டுதிரி பச்சைக் குதிராய் உனக்கெதிரோ பண்டுதிரி வெய்யோன் பரியேழும்-கண்ட செகமுழுதும் நீஞான தீபமும்நீ யென்று சுகமுனியே சொல்லாரோ சொல்லாய்-வகைவகையாய் எவ்வண்ண மாய்ப்பறக்கும் எப்பறவை யாயினும்உன் ஐவண்ணத் துள்ளே யடங்குமே-மெய்வண்ணம் பார்க்கும்பொழுதி லுனைப் பார்ப்பதியென் பாரென்றோ மூக்குச் சிவந்தாய் மொழிந்திடாய்-நாக்குத் தடுமாறு வோரையெல்லாந் தள்ளுவரே யுன்னை விடுவார் ஒருவருண்டோ விள்ளாய்-அடுபோர் |
10 | மறந்தரு சீவகனார் மங்கையரில் தத்தை சிறந்ததுநின் பேர்படைத்த சீரே-பிறந்தவர் ஆரும் பறவைகளுக் கச்சுதன்பே ருஞ்சிவன் றன் பேரும் பகர்ந்தாற் பிழையன்றோ-நேர்பெறுவி வேகி யொருகூடு விட்டுமறு கூட்டையும் யோகி யுனக்குவமை யுண்டோகாண்-நீகீரம் ஆகையா லாடை யுனக்குண்டே பாடகமும் நீகொள்வாய் காலாழி நீங்காயே-ஏகாத கற்புடையாய் நீயென்றாற் காமனையுஞ் சேர்வாயே அற்புடைய பெண்கொடிநீ ஆகாயோ-பொற்புடையோர் |
15 | துன்னியசா யுச்யஞ் சுகரூபம் ஆகையால் அன்னது நின்சொரூபம் அல்லவோ-வன்னி பரிசித்த வெல்லாம் பரிசுத்தம் என்றோ உருசித்த உன்னெச்சில் உண்பார்-துரிசற்றோர் இன்சொல்லைக் கற்பா ரெவர்சொல்லும் நீகற்பாய் உன்சொல்லைக் கற்கவல்லார் உண்டோகாண்-நின்போலத் தள்ளரிய யோகங்கள் சாதியா தேபச்சைப் பிள்ளையாய் வாழும் பெரியோரார்-உள்ளுணர்ந்த மாலினைப் போல மகிதலத்தோர் வாட்டமறப் பாலனத் தாலே பசிதீர்ப்பாய்-மேலினத்தோர் |