பக்கம் எண் :

56அழகர் கிள்ளைவிடு தூது


 
'தூது' என்ற நூல் இலக்கணம்

இலக்கண விளக்கச் சூத்திரம்

பயிறருங் கலிவெண் பாவி னாலே
உயர்திணைப் பொருளையு மஃறிணைப் பொருளையும்
சந்தியின் விடுத்தல் முந்துறு தூதெனப்
பாட்டியற் புலவர் நாட்டினர் தெளிந்தே.
 

இரத்தினச் சுருக்கம்

இயம்புகின்ற காவத் தெகினமயில் கிள்ளை
பயம்பெறுமே கம்பூவை பாங்கி-நயந்தகுயில்
பேதைநெஞ் சந்தென்றல் பிரமரமீ ரைந்துமே
தூதுரைத்து வாங்குந் தொடை.