| 1.
|
சீர்கொண்ட
கூடற் சிவராச தானிபுரந்
தேர்கொண்ட சங்கத் திருந்தோரும் - போர்கொண் |
| |
|
| 2. |
டிசையுந்
தமிழரசென் றேத்தெடுப்பத் திக்கு
விசையஞ் செலுத்திய மின்னும் - நசையுறவே |
| |
|
| 3. |
செய்யசிவ
ஞானத் திரளேட்டி லோரேடு
கையி லெடுத்த கணபதியும் - மெய்யருளாற் |
| |
|
| 4. |
கூடல்
புரந்தொருகாற் கூடற் புலவரெதிர்
பாடலறி வித்த படைவேளும் - வீடகலா |
| |
|
| 5. |
மன்னுமூ
வாண்டில் வடகலையுந் தென்கலையும்
அன்னைமுலைப் பாலி னறிந்தோறும் - முன்னரே |
| |
|
| 6. |
மூன்றுவிழி
யார்முன் முதலையுண்ட பிள்ளையைப்பின்
ஈன்றுதரச் சொல்லி னிசைத்தோருந் - தோன்றயன்மால் |
| |
|
| 7. |
தேடிமுடி
யாவடியைத் தேடாதே நல்லூரிற்
பாடி முடியாப் படைத்தோரும் - நாடிமுடி |
| |
|
| 8. |
மட்டோலைப்
பூவனையார் வார்ந்தோலை சேர்த்தெழுதிப்
பட்டோலை கொள்ளப் பகர்ந்தோரும் - முட்டாதே |
| |
|
| 9. |
ஒல்காப்
பெருந்தமிழ்மூன் றோதியருண் மாமுனியும்
தொல்காப் பியமொழிந்த தொன்மொழியும் - மல்காச்சொற் |