62.
|
அரியா
சனமுனக்கே யானா லுனக்குச்
சரியாரு முண்டோ தமிழே - விரிவார் |
|
|
63. |
திகழ்பா
வொருநான்குஞ் செய்யுள்வரம் பாகப்
புகழ்பா வினங்கண்மடைப் போக்கா - நிகழவே |
|
|
64. |
நல்லேரி
னாற்செய்யு ணாற்கரணத் தேர்பூட்டிச்
சொல்லே ருழவர் தொகுத்தீண்டி - நல்லநெறி |
|
|
65. |
நாலே
விதையா நனிவிதைத்து நாற்பொருளும்
மேலே பலன்பெறச்செய் விக்குநாள் - மேலோரிற் |
|
|
66. |
பாத்தனதாக்
கொண்டபிள்ளைப் பாண்டியன் வில்லியொட்டக்
கூத்தனிவர் கல்லாது கோட்டிகொளுஞ் - சீத்தையரைக் |
|
|
67. |
குட்டிச்
செவியறுத்துக் கூட்டித் தலைகளெல்லாம்
வெட்டிக் களைபறிக்க மேலாய்த்தூர் - கட்டி |
|
|
68. |
வளர்ந்தனைபான்
முந்திரிகை வாழைக் கனியாய்க்
கிளர்ந்தகரும் பாய்நாளி கேரத் - திளங்கனியாய்த் |
|
|
69. |
தித்திக்குந்
தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான
முத்திக் கனியேயென் முத்தமிழே - புத்திக்குள் |
|
|
70. |
உண்ணப்
படுத்தேனே யுன்னோ டுவந்துரைக்கும்
விண்ணப்ப முண்டு விளம்பக்கேள் - மண்ணிற் |
|
|
71. |
குறமென்று
பள்ளென்று கொள்வார் கொடுப்பாய்க்
குறவென்று மூன்றினத்து முண்டோ - திறமெல்லாம் |
|
|
72. |
வந்தென்றுஞ்
சிந்தா மணியா யிருந்தவுனைச்
சிந்தென்று சொல்லியநாச் சிந்துமே - அந்தரமேல் |
|
|
73. |
முற்றுணர்ந்த
தேவர்களு முக்குணமே பெற்றார்நீ
குற்றமிலாப் பத்துக் குணம்பெற்றாய் - மற்றொருவர் |
|
|
74. |
ஆக்கிய
வண்ணங்க ளைந்தின்மே லுண்டோநீ
நோக்கிய வண்ணங்க ணூறுடையாய் - நாக்குலவும் |