பக்கம் எண் :

விளக்கவுரை55


பாடற் கருமையான பரணியென்னும் நூலும், கூடல் மன்னன்: கூடற் பெரும்
பெருமாள் என்று பெயர்பெற்ற இராசராச சோழன் ஒட்டக்கூத்தன் எதிரே
யமர்ந்து ஒரு கண்ணிக்கு ஓர் ஆயிரம் பொன் பரிசில் தந்து பெற்ற உலா
என்னும் நூலும், யாவரும் துதிக்கும் அவ்வொட்டக்கூத்தன் பாடிய பிள்ளைத்
தமிழும், முதலாகிய எந்நாளும் பெயராத பல புலவர் பெருமக்கள்
வெள்ளமென்ற எண்ணினும் மிகுதியாகியவர் (ஆகிய மெய்காப்பாளர்)
மெய்காத்து நிற்க மனத்துள் வீரம் செறிந்து தீவினைகள் நீங்குமாறு
முதன்மையான செயல் செய்து வருகின்ற கவிதை என்ற அரசனே.

     (வி - ம்.) ஆடகம் - பொன், தங்கம். மாவெற்பு - பெரிய மலை.
தங்கமலை போன்ற செந்நிறமும் ஆற்றலும் உடையார் சிவபெருமான்
ஆதலின் வெற்பனையார் என்றார். மாதை - திருவாமாத்தூர். விமலர் -
மலமற்றவர். இதுவும் இறைவனையுணர்த்திற்று. இருவர் - இரட்டையர் என்ற
புலவர்கள். திருவாமாத்தூர்க் கலம்பகம் இரட்டையராற் பாடப்பட்டது என்ற
வரலாறு தெரிக. முற்படையோடு சென்று ஆடலாற் போர் புரிந்து அழித்துக்
கொன்றதனாற் பெற்ற பரணியும் எனச் சொல் வருவித்துப் பொருள் கொள்க.
பாடற்கு அரிய - பாடுவதற்கு முடியாத; முற்றறிவுடைக் கூத்தர் போன்ற
புலவராலன்றிச் சிற்றறிவுடைய ஏனைப் புலவரால் எளிதாகப் பாடவியலாதது
பரணி என அந்நூலின் பெருமையை விளக்கிற்று. ஆயிரம் யானை கொன்ற
என்பது, ஆயிரம் யானையைப் போர்க்களத்திற் கொன்றவனையே பாட்டுடைத்
தலைவனாகக் கொண்டு பாடுவது பரணி என்னும் நூல் என்பதையும்
விளக்கியது. “ானை யாயிர மமரிடை யட்ட, மானவனுக்கு வகுப்பது பரணி”
என்ற இலக்கணமும் காண்க. நர + அதிபன் = நராதிபன். நரர் - மனிதர்.
அதிபன் - தலைவன். இஃது வடமொழித் தொடர். வேந்தன் என்பது பொருள்.
கூடல் - புகார்; காவிரிப்பூம்பட்டினம். காவிரி கடலொடு கலக்குந் துறையில்
இஃது கூடியிருத்தலாற் கூடல் எனப்பட்டது. உலாவில் ஒட்டக்கூத்தர்
இராசராசசோழனைக் “கூடற்பெரும் பெருமாள்”