பக்கம் எண் :

கட
107
பாங்கியிற் கூட்டம்

 
பாங்கி தலைவியருமை சாற்றல்:
       பாங்கி   தலைவியருமை   சாற்றல்   என்பது,   பாங்கி    தலைவியை
அரியளாக்கிக் கூறல்.

  புகழார் வரையெம் புரவலன் காதற் புதல்வியைநீர்
இகழா வெளியளென் றெண்ணப் பெறீரெமக் கென்றும்வண்மை
திகழா பரணன் செழுந்தஞ்சை வாணன் சிலம்பினுள்ளீர்
அகழார் கலியுல கிற்புல னான அணங்கவளே.

     (இ-ள்.) எமக்கெஞ்ஞான்றும்  வளமை  யொளிரும்   ஆபரணம்   போன்ற
செழுந்தஞ்சை வாணனது சிலம்பிலிருப்பீர், புகழ் நிறைந்த வரைக்கு இறைவனாகிய
எம்புரவலர்க்குக்  காதற்  புதல்வியா  யுள்ளாளை  யிகழ்ந்து  எளிளென்றெண்ணப்
பெறுந் தகுதியுடையீரல்லீர்,  அவள் சகரரால் அகழப்பட்ட  கடல்சூழ்ந்த  வுலகில் அறிவுருவான தெய்வப்பெண் என்றவாறு.

வரை - மலை.  புரவலன் - அரசன்.  ஆர்கலி - கடல்.

(86)    
தலைவன் இன்றியமையாமை இயம்பல்:
      தலைவன்  இன்றியமையாமை   இயம்பல்   என்பது,   இன்றியமையாமை
ஒருசொல், முடிந்த பொரளாய்த் துணிபுபற்றிய சொல்; என்னை,

  1`நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு`

      என்பதுபோலத்  தலைவி  இன்றியமையாமை  கூறல்.


வனைந்தா லனகொங்கை மாதுரு வாய்த்தஞ்சை வாணன்வெற்பில்
புனைந்தா லனைய வுனத்தயல் வாய்வண்டு போதகத்தேன்
நினைந்தா லனையவென் னல்வினை தான்வந்து நண்ணிற்றென்று
நினைந்தா லணங்கனை யாய்தமி யேனுயிர் நிற்கின்றதே.

     (இ-ள்.)  அணங்குபோல்வாய்!      தஞ்சைவாணனது       வெற்பிடத்து
அலங்கரித்தாற்போலும்   புனத்தின் பக்கத்தில் என் நல்வினை தான்,  கைவல்லார்
கையினாற் செய்து  வைத்தாற்  போலுங்  கொங்கையையுடைய  மாதுருவாய் வந்து
பொருந்திற்றென்று நீ நினைத்தால், போதகத்திலிருக்குந் தேனில் வண்டு நனைந்தா
லொத்த    அத்தலைவி   யின்பத்தின்    மூழ்குந்   தமியேனுயிர்   நிற்கின்றது;
நினையாவிடின் நில்லாதென் றறிவாய் என்றவாறு.


1. திருக்குறள், வான்சிறப்பு - 10.