பக்கம் எண் :

கட
109
பாங்கியிற் கூட்டம்

 
     ஆர் - ஒப்பு. `நுதல்விழி` என்புழி:  உம்மைத்தொகை.  விழி : ஆகுபெயர்.
தெவ்: ஆகுபெயர். ஒல்லாது - பொருந்தாது. உணங்கல் - உலர்தல். `இன்றிந்நாள்`:
என இயையும்.  `நின்குறை யல்ல என்குறை`  என்றது  குறிப்புமொழி.  `கற்கறித்து
நன்கட்டாய்`  என்பதுபோல்,  1`வயக்குறு   மண்டிலம்`   என்னும்   பாலைக்கலி
பன்னீரடித்தரவில்,   `இறத்திராலைய  மற்றிவணிலைமை  கேட்டீமின்`    என்றது
போலும் ஒருமை பன்மை மயக்க மெனக் கொள்க. பாங்கி : முன்னிலையெச்சம்.

     `இன்றிந்நாளெல்லா மிரந்தது` என்று வரையறுத்துக் கூறியவதனால் `குறையுற
வுணர்தல்` முதல்,  நாலாநாட் செய்தி  என்று  அறிவித்தற்குக்  கூறியவாறென்று
உணர்க.
(89)    
  தேனுஞ் கரும்புஞ் செறிதொங்கல் வாணன்தென் மாறைவெற்பா
மானுங் கலையும் வடிக்கணை யாலெய்து மன்னுயிரும்
ஊனுங் கவர்கின்ற தன்னையர் போலயி லொத்தகண்ணாள்
தானும பிறருள்ள நோயறி யாத தகைமையளே.

     (இ-ள்.) பெடையும்   கரும்பும்   செறிந்த   மாலையையணியும்  வாணனது
தென்மாறைநாட்டு வெற்பிலுள்ளவனே! மானும் கலையும் வடித்த கணையால் எய்து,
அவ்விலங்கினது உயிரும் ஊனும் கொள்கின்ற தன்னுடன் பிறந்த தன்னையர்போல,
வேலொத்த கண்ணினையுடையாள்  தானும பிறருள்ளத்  தின்கண்ணுள்ள நோயை
யறியாத முறைமையள் என்றவாறு.

      தேன்:   சாதிப்பெயர்;    பெடைமேல் நின்றது.   சுரும்பு - ஆண்வண்டு.
வடி - வடித்தல்.     கவர்தல் - கொள்ளுதல்.      தன்னையர் - தமையன்மார்.
அயில் - வேல்.   தகைமை - முறைமை. ஓரிடத்திற் பிறந்தவராகலான் தன்னையர்
குணம் இவட்குமாயினவாறு உணர்க.
(90)