பக்கம் எண் :

கட
தஞ்சைவாணன் கோவை
140

 
இலையான்மேய்ந்த குடில்வீட்டுள் தங்கினால் உமக்கியாது குறைவரும்  என்றவாறு.

    உலைப்பெய்தல் - உலையிற்பெய்தல்.   வார்தல் வடித்தல்.   மூரல் - சோறு.
தலைப்பெய்தல் - கூடுதல்.     1`ஆங்க     விரண்டேதலைப்    பெயன்மரபே`
என்பதனாலுணர்க.   என்வரும் - யாது     குறைவரும்.     
இங்ஙனங் கூறியது
இரவுக்குறியை  நாடிப்  பகற்குறியை  விலக்கிய   கருத்தென்றுணர்க.   என்னை,
தினைவிளைந்ததால் 
 நாளை    தினையறுத்து  இவள்  ஊர்க்குப்   போதலால்,
தலைவனையும்  ஊர்க்கு  வா என்று கூறி வந்தால் இரவுக்குறியிற்  
கூட்டுவிப்பே
னெனுங்  குறிப்புத்  தோன்றக்  கூறியதன்றி  விருந்து  கூறியதன்  
 றெனவுணர்க.
தலைவன் முன்னிலையெச்சம்.
(140)    
விருந்திறை விரும்பல்:
     விருந்து இறை விரும்பல் என்பது, அவ்வூணைத் தலைவன் விரும்பிக் கூறல்.

  1மஞ்சூட்டி யன்ன கதைமதில் சூழ்தஞ்சை வாணன்வெற்பில்
பஞ்சூட் டியமென் பதயுகத் தீருங்கள் பாடியின்மான்
வெஞ்சூட் டிழுதன்ன ஊனும்பைந் தேனும் விருந்தினர்க்குச்
செஞ்சூட் டிளகுபொன் போல்தினை மூரலுந் தெள்ளமுதே.

     (இ-ள்.) முகில யருந்தியதுபோன்ற கதைபூசிய மதில்சூழ்ந்த  தஞ்சைவாணன்
வெற்பில்  பஞ்சைப்  பொருந்திய மெல்லிய பாத மிரண்டுடையீர்!  உங்களூரிடத்து
வெண்ணெய்போன்ற  வெவ்விய  சூட்டுண்ட  மானூனும்,  பசிதேனும்,   செஞ்சூடு
சுட்டிளகிய பொன் போன்ற தினைச்சோறும் விருந்தினர்க்குத்  தெள்ளமுதுபோலும்
என்றவாறு.

     எனவே,  பாங்கி   கூறிய  இரவுக்குறியைத்  தலைவன்  குறிப்பாலுணர்ந்து
இயைந்து  கூறியது;  இக்கருத்தானேயன்றே  பகற்  குறியிடையீடு   பட்டவாறென்
றுணர்க.

     ஊட்டல் - அருந்துதல்.   கதை - வெண்சாந்து.  பஞ்சூட்டல் - செம்பஞ்சு
பொருந்துதல். பாடி - முல்லை; ஊர்க்குப் பொருள் மயக்கம். செஞ்சூட்டிளகுபொன்.
`சிவக்கச்  சுட்டிளகிய  பொன்  இழுதன்ன  வெஞ்சூடு`    எனவும்    `மானூன்`
எனவுமியையும்.

பாங்கி கூற்றாயினவெல்லாம், `கூட்டற்கும்` `பாங்கிற்கூட்டற்`கும் உரிய.   தலைவன்
கூற்றாயின வெல்லாம். `கூடற்`கும் `கூட்டற்`கும், `வேட்டற்`கும் உரியவாறு உணர்க.
(141)    
பாங்கியிற் கூட்டம் முற்றிற்று.

1. இறையனார் அகப்பொருள் - 3.