பக்கம் எண் :

கட
தஞ்சைவாணன் கோவை
142

 
  1`காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்`

என்பது தன்னுட் கூறியது.
(142)    
பாங்கி புலம்பல்:
  காலையம் போருக வாள்முகத் தாளன்பர் கையகல
மாலையம் போது வருவித்த நீர்தஞ்சை வாணன்தெவ்வர்
ஆலையம் போலுங்க ளாதவன் கோயி லழல்கொளுந்த
வேலையம் போடுழல் வீர்பரி காளென்றும் வெய்துயிர்த்தே.

     (இ-ள்.) பரிகாள்,   காலை   அம்போருகம்போலும்   ஒளியை    யுடைய
முகத்தாளைத்  தலைவர்  கையகல    மாலையம்  பொழுதை  வரச்செய்த    நீர்
தஞ்சைவாணன் தெவ்வராலயம் போல், உங்கட்கு இறைவனாகிய கதிரவன் கோயில்
அழல் பற்றக் கடலில் தண்ணீரோடே  யெப்போதும்  நெட்டுயிர்த்து வருந்துவீராக
என்றவாறு.

     காலையம்போருகம் - முறுக்கவிழ்தாமரை.      `அம்போருக வாள் முகம்`:
உவமைத்தொகை.  `முகத்தாள்`  என்புழி  இரண்டனுருபு  தொக்கது.  கையகல் -
ஒருசொல்: அதுபிரிதல்.

  2`செற்றர் ரௌக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்
உற்றா லுறாஅ தவர்`

என்பதுபோலும்.

     ணுதெவ்வர் - பகைவர்.  ஆதவன் - கதிரவன். கொளுந்தல் - கொளுத்தல்.
அம்பு - நீர். உழலுதல் - வருந்துதல். வெய் துயிர்த்தல் - நெட்டுயிர்த்தல்.
(143)    
தலைவனீடத் தலைவி வருந்துதல்:
     தலைவன் நீடத் தலைவி வருந்துதல் என்பது.  தலைவன் வாராது  நாழிகை
நீட்டித்துழித் தலைவி வருந்திக் கூறுதல்.

  ஆராத வின்ப விடந்தொறு நீங்கிய வாயமென்பால்
வாராத முன்னம் வருகில ராற்றஞ்சை வாணன்வெற்பில்
கூரா தரநல்கி வல்வினை யேனலங் கொள்ளைகொண்டு
தேரா தளனுட னேநென்னல் மாலையிற் சென்றவரே.

     (இ-ள்.) தஞ்சைவாணன்   வெற்பில்    மிகுந்த    காதலைக்   கொடுத்து,
வல்வினையேன் நலத்தையெல்லாங் கொள்ளை கொண்டு, தேரோடு

1. குறள். பொழுதுகண்டிரங்கல் - 7.
2. குறள். நெஞ்சொடு கிளத்தல் - 5.