பக்கம் எண் :

கட
13. இரவுக்குறி
156

 
அஃதாவது தலைவன் தலைவியை இரவுக்குறியிற் கூடுதல்.

  1`வேண்டல் மறுத்த லுடன்படல் கூட்டம்
கூடல்பா ராட்டல் பாங்கிற் கூட்டல்
உயங்கல் நீங்கலென் றொன்பது வகைத்தே
இயம்பிப் போந்த இரவுக்குறி தானே`

     என்னுஞ் சூத்திரவிதியான் இரவுக்குறி ஒன்பது வகைப்படும்.

இறையோன் இருட்குறி வேண்டல்:
     இறையோன்  இருட்குறி  வேண்டல்    என்பது,  தலைவன் இருட்குறியை
விரும்பிப் பாங்கியுடன் கூறல்.



கருவிருந் தெண்டிசை யுங்கன மாமழை கான்றதுள்ளம்
வெருவிருந் தெம்பதிக் கேகவொண் ணாது விதம்விதமாய்
வருவிருந் தென்றும் புரந்தருள் வாணன்தென் மாறையன்னீர்
ஒருவிருந் தெங்களைப் போலெய்து மோகங்குல் உங்களுக்கே.

     (இ-ள்.) வகைவகையாய் வரும் விருந்தை எஞ்ஞான்றும்  ஓம்பும்  வாணன்
தென்மாறை நாடுபோல்வீர், சூல்கொண்டு முகில் எண்டிசையும் பெரிய  மழையைப்
பெய்தது;  ஆதலால்,   உள்ளத்தினிடையே   அச்சமிருத்தலால்  எம்   பதிக்குச்
செல்லுதல்  கூடாது.  இற்றைக்கு வைகுதல் வேண்டும்; எங்களைப்போல்  ஒப்பற்ற
விருந்து   இந்தக்   கங்குலின்கண்   உங்களுக்கு   நீர்  வருந்தித்   தேடுகினும்
கிடைக்குமோ, சொல்லுவீராக என்றவாறு.

     கரு - சூல். கனம் - முகில். கான்றல் - பெய்தல். வெருவு - அச்சம். ஏக -
போக. ஒண்ணாது - கூடாது.   விருந்து புரத்தல் - விருந்தோம்பல்.    அன்னீர்:
உயர்சொற்கிளவி.
(163)    
பாங்கி நெறியின தருமைகூறல்:
  மலைமாது வல்லவன் வாணன் வரோதயன் மாறைவெற்பில்
சிலைமா லுருமெங்குத் தீயுமி ழாநிற்குஞ் சிங்கமெங்கும்
கொலைமா கரியிரை தேர்ந்துழ லாநிற்குங் கொற்றவபொற்
கலைமா னுறைபதி நீவரு மாறென்கொல் கங்குலிலே.

     (இ-ள்.) வீரமகட்குக்    கணவனாகிய    வாணனென்னும்     வரோதயன்
வெற்பிடத்திற் கொற்றவனே! மேகலை பொருந்திய மான்  உறைகின்ற  பதிக்கு  நீ
வருகின்ற வழி வில்லொடுகூடிய மேகத்திடத்து இடிகளெங்குந் தீயைக்

1. அகப்பொருள் விளக்கம், களவியல் - 40.