|
|
வருவள் என்று தலைவன் வந்து நிற்க. தலைவன் வருங்கால் அணித்தும் அல்லது சேய்த்தும் அல்லதாய ஒருபுன்னை மரத்திருந்த அன்னங்கள் தற்செயலா யெழுந்து ஆரவாரிக்க, அது தோழியாலறிந்த தலைவி, அவ்வன்னங்களெழுந்த புன்னைக் கீழ் வந்து நின்று போயினள்.
|
தலைவனும் மயிலிருக்கும் புன்னைக் கீழ் நின்று தலைவியைக் காணானாய், இரு புன்னைக்கும் நடுவிருந்த தாழைமரங்களிலே ஒரு மரத்தில் தான் வந்து போயதற்கு அடையாளமாகத் தான் அணிந்த மாலையை வைத்துப் போயினன். இருவரும் அல்ல குறிப்பிட்ட காரணம் இஃது என்று உணர்க.
|
| பேசத் தகுவதொன் றன்றுகண் டாய்பிறி தோர்குறியை நேசத் தவர்குறி யென்றுசென் றியான்குறி நின்றுவந்தேன் வாசத் தமிழ்புனை கோளுடை யான்தஞ்சை வாணனொன்னார் தேசத் தவருமெய் தாவெய்ய நோயெய்திச் சேயிழையே.
|
(இ-ள்.) சேயிழையே! தலைவர் நிகழ்த்த நிகழ்ந்ததல்லாதாய்ப் பிறிதொன்றானிகழ்ந்த அடையாத்தை நேசத்தையுடைய தலைவர் நிகழ்த்திய அடையாளமாக எண்ணிப்போய்க் குறியினின்றும், மணம்பொருந்திய தமிழ்மாலை புனைந்த தோளுடையானாகிய தஞ்சைவாணன் பகைவர் தேசத்திலுள்ளோரும் எய்தாத கொடிய துன்பத்தை யெய்தி வந்தேன், அத்துன்பம் சொல்லத்தகுவதொன்று அன்று என்றவாறு. |
கண்டாய்: முன்னிலையசை - குறி - அடையாளம். நேசத்தவர் - அன்புடையவர். வாசம் - மணம். ஒன்னார் - பகைவர். |
(191) |
பாங்கி தலைமகன் தீங்கெடுத் தியம்பல் |
பாங்கி தலைமகன் தீங்கெடுத்து இயம்பல் என்பது, பாங்கி தலைவன் பொல்லாங்கை யெடுத்துக் கூறல்.
|
| வடியோ வெனுங்கண் மடந்தைநல் லாய்தஞ்சை வாணனைவந் தடியோ மெனச்சென் றடையலர் போலயர் கின்றநின்கைத் தொடியோட மென்பணைத் தோளிணை வாடுந் தொழில்புரிந்த கொடியோர் துணிந்துசெய் தார்குறி யாத குறிநமக்கே.
|
(இ-ள்.) வடுவோ கண்ணோ என்று ஐயந்தருங் கண்ணையுடைய மடந்தை நல்லாய்! தஞ்சைவாணனை வந்து யாம் அடியோமெனச் சொல்லி யடையாதவர் போல அயர்கின்ற நின் கைத்தொடி யோடிப்போக மெல்லிய மூங்கில் போன்ற தோளிணை வாடுந் தொழிலைக்கொடுத்த கொடியோர் குறியாத குறியை நமக்குத் துணிந்துசெய்தார் என்றவாறு. |