|
|
(இ-ள்.) புயமாகிய மலையிரண்டினால் கருங்கடல் சூழ்ந்த வுலகத்தை நிலைக்கச் செய்த வாணன் தென்மாறை வெற்பிடத்திலிருக்கும் மின்னே! இச்சோலையிலிருக்குங் கைதையானது, மெல்லிய கழுநீர்மாலை யுடைத்தாயிராதே இங்ஙனம் உடைத்தாயிருத்தலால், அவர்தங் குறியும் பொய்த்துப் போகாது, அவரும் பிழைத்தல் செய்யார், அவர் நம்மிடத்திற் பூண்ட அன்பு மெய்யாதலைத் தெளிந்து இரங்கலை என்றவாறு.
|
`புயவெற்பு இரண்டால் வைய நிலையிடல்` புயவலியால் நிலவுலகத்தைத் தாங்கி நிலைக்கச் செய்தல். தம் - அவர்தம். பிழைத்தல் - தப்பல். வையம் - உலகம். உய்யானம்: ஆகுபெயர். |
(196) |
இறைவன்மேற் பாங்கி குறிபிழைப் பேற்றல்: |
இறைவன்மேற் பாங்கி குறி பிழைப்பு ஏற்றல் என்பது ஒன்பதாநாள் இரவுக்குறிக்கு வந்த இறைவன்மேற் பாங்கி அல்ல குறிப்பிட்ட குற்றம் ஏற்றிக் கூறல். |
| விம்மூர் துயர்க்கடல் வெள்ளத்துள் ளேயெம்மை வீழ்வித்துநீர் எம்மூ ரகத்து வரலொழிந் தீரெதி ரேற்றதெவ்வர் தம்மூரை முப்புரமாக்கிய வாணன் தமிழ்த்தஞ்சைபோல் உம்மூர் வரத்துணிந் தோமன்பர் கூறுமவ் வூரெமக்கே.
|
(இ-ள்.) அன்பரே! விம்முதல் நிகழப்பட்ட துன்பக் கடலாகிய வெள்ளத்துள் எங்களை வீழத்தள்ளி எம்ஊரிடத்து நீர் வருதலை யொழிந்தீர்; ஆதலால், எதிராய்ப் போரேற்றதெவ்வர் தம் உரை முப்புரமாக எரித்த வாணனது தமிழ்த்தஞ்சைபோலும் வளமுடைய உம்மூரிடத்து வரத் துணிந்தோம், அவ்வூர ்இத்திசையென்று எமக்கு அறியக்கூறும் என்றவாறு. |
அன்பர்: அண்மைவிளி. விம்முதல் - துன்பம் உள்ளடங்காது மேன்மேல் ஏற்றி யெற்றி வருதல். ஊர்தல் - செல்லுதல். எதிரேற்றல் - போரேற்றல். தெவ்வர் - பகைவர். முப்புரமாக்குதல் - எரித்தல். |
(197) |
இறைவிமே லிறைவன் குறிபிழைப் பேற்றல்: |
இறைவிமேல் இறைவன் குறிபிழைப்பு ஏற்றல் என்பது, தலைவி மேல் தலைவன் அல்லற்குறிப்பட்ட குற்றம் ஏற்றிக் கூறுதல்.
|
| துறந்தன ளாகியம் போருகந் தன்னையித் தொல்வரைமேல் பிறந்தன ளாகும் பெருந்திரு மாதெனப் பேதையரில் சிறந்தன ளாதலிற் செந்தமிழ் வாணன்தென் மாறையன்னாள் மறந்தன ளாயினும் யாமொரு போது மறவலமே. |