பக்கம் எண் :

கட
191
வரைதல் வேட்கை

 
குறி   விலக்குவித்தல்   என்பது,   தலைவி   தலைவன்   வரும் இரவுக்குறியை
விலக்கெனப் பாங்கியொடு கூறல்.

  வெற்றிய வாவிய வாணர் பிரான்தஞ்சை வெற்பகத்திப்
பெற்றிய சோலைப் பிறங்கிருள் வாரல்மீன் பேதையின்னும்
முற்றிய வேனற் படுகிள்ளை யோட்டு முறைமையளென்
றெற்றிய காதலி னாலிசைத் தாளன்னை யென்றுரையே.

     (இ-ள்.) தலைவி  இன்னும் முற்றிய  தினையிடத்து  வீழுங்  கிளியோட்டும்
முறைமையளென் றிரங்கிய  காதலினால் அன்னை சொன்னாளாதலால், வெற்றியை
விரும்பிய  வாணர்பிரானது   தஞ்சை  வெற்பிடத்து  இவ்விடையீடு  படுவதாகிய
சோலையிற்  செறிந்த  இருட்குறியிடத்து  வாராதொழிமினென்று  அன்பர்க்கு  நீ
கூறுவாயாக என்றவாறு.

     பாங்கி முன்னிலை  அதிகாரப்பட்டு வருதலாற் கொள்க. அன்பர்க்கு என்பது
அவாய் நிலையான் வந்தது. பிறங்கல் - செறிதல். எற்றல் - இரங்கல். இசைத்தல் -
கூறுதல். வாரன்மின் : ஒருமை பன்மை மயக்கம். என்னை,  1`வயக்குறு மண்டிலம்`
என்னும் பாலைக்கலியில், `இறத்திரா லையமற் றிவணிலைமை கேட்டீமின்` என்றாற்
போலக் கொள்க.

  2`ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி
பன்மைக் காகு மிடனுமா ருண்டே`

என்னுஞ் சூத்திர விதியானும் உணர்க.
(224)    
வெறி விலக்குவித்தல்:
     வெறி விலக்குவித்தல் என்பது,  தலைவி,  தாய் வெறியாடுதல்  கொண்டாள்
என்று தலைவர்க்குக் கூறி வரவு விலக்கெனத் தோழியோடு கூறல்.

  மின்னா திடித்தென அன்னைகொண் டாள்வெறி விந்தைமங்கை
மன்னாண்மை மன்னிய வாணன்தென் மாறை வரையில் வண்டியாழ்
என்னா அசுண மிறைகொள்ளு நாட ரெனக்கருளால்
முன்னா ளருளிய நோய்தணிப் பானின்று மொய்குழலே.

     (இ-ள்.) மொய்குழலே!  வெற்றி  மங்கையால்  அரசாண்மை   நிலைபெற்ற
வாணன் தென்மாறையில் வண்டிசையை யாழிசை யென்றெண்ணி
1. கலித். பாலை - 24.      2. தொல். சொல். எச்சவியல் - 65.