பக்கம் எண் :

207
17. ஒருவழித் தணத்தல்

 
அஃதாவது,கூறிய பாங்கியொடு வரைதற்குடன்பட்ட தலைவன் தன்னூர்க்கு ஒருவழி
போய்வருகிறேனென்று போதல்.

 1`செலவறிவுறுத்தல் செலவுடன் படாமை
செலவுடன் படுத்தல் செலவுடன் படுதல்
சென்றுழிக் கலங்கல் தேற்றியாற் றுவித்தல்
வந்துழி நொந்துரை யெனவெழு வகைத்தே
ஒன்றக் கூறிய வொருவழித் தணத்தல்`
என்னுஞ் சூத்திரவிதியால் ஒருவழித்தணத்தல் எழுவகைப்படும்.

தன்பதிக் ககற்சி தலைவன் சாற்றல் :
  திரைகே தகைமணங் கூடுமெம் பாடியிற் சென்றுவந்தியான்
வரைகேன் வருந்துணை வல்லியை நீதஞ்சை வாணன்செவ்வேல்
புரைகேழ் மதர்விழிக் கோங்கரும் பேர்முலைப் பூசல்வண்டு
நிரைகேச வஞ்சியஞ் சேலென்று தேற்றுதல் நின்கடனே.

     (இ-ள்.) தஞ்சைவாணனது  செவ்வேலையொக்கும் நிறம் பொருந்திய மதர்த்த
விழியையும்  கோங்கரும்பு  போன்ற அழகிய முலையையும் ஆரவாரிக்கும் வண்டு
நிரை  யாயிருக்குங்  கேசத்தையும்  உடைய  வஞ்சிபோன்றவளே!   திரையானது
தாழம்பூ  மணத்தைக்   கூட்டும்  எம் ஊரில் யான்  சென்று வந்து  வரைவேன்;
வருமளவும்  நீ வல்லியை அஞ்சலென்று தேற்றுதல் நின் கடன் என்றவாறு.



     திரை - அலை.  கேதகை - தாழை. பாடி - ஊர். கேழ் - நிறம். மதர்விழி -
மதர்த்த விழி.    பூசல் - ஆரவாரம்.    கேசம் - அளகம்.   கடன் - முறைமை.
அகற்சி - பிரிவு.
(248)    
பாங்கி விலக்கல்:
  பறந்தாங் கிவர்பரித் தேர்கட வேலுன் பதியடைந்தால்
மறந்தாங் கமையவும் வல்லையன் பாதஞ்சை வாணனொன்னார்
நிறந்தாங் கிவர்கணை போலுண்கள் மாமுகி னீர்மைகொண்டு
புறந்தாழ கருங்குழல் வெண்முத்த வாணகைப் பொன்னினையே.
     (இ-ள்.) அன்பனே!   நின்    ஊர்க்குப்    போய்ச்     சேர்ந்தையானால்,
தஞ்சைவாணன்    ஒன்னார்    மார்பு    தாங்க    இவருங் கணையையொக்கும்
உண்கண்ணையும், முகிலினது   தன்மையைக்கொண்டு   புறத்திலே   தாழப்பட்ட
கருங் குழலையும், வெண்முத்தம்போன்ற ஒளிபொருந்திய

1. அகப்பொருள் விளக்கம், களவியல் - 50.