பக்கம் எண் :

தஞ்சைவாணன் கோவை
218

 
செடியும் மூங்கிலும்   நெருங்கும் வெவ்விய காட்டினிலக்கணத்தைக் கேட்டும் யான்
துயருழக்கும் இவ் வேட்கை நோயைக் கண்டும் மனத்திடத்துக் கலக்கஞ் செல்லாது
இந்த ஊர் என்னைக் கழறுதல் நன்றே என்றவாறு.
(266)    
பாங்கி கழறியவதனை ஊரின்மேல் வைத்துக் கூறியது:
    வாணனுக்கு வன்புலியும் செண்டும் கொடுத்தகல் செம்பியர் போலத் தலைவன்
சென்றான் என்று தலைவனுக்கு இகழ்ச்சி தோன்றியதெனின், தலைவன் ஊர்விட்டுக்
கானிடைச்   சென்றதற்கு  உவமை
 கூறியதல்லது பதிகொடுத்தற்கு உவமை கூறிய
தன்றாதலான், இகழ்ச்சி தோன்றதென் றுணர்க.
   மண்டுதல் - நெருங்குதல். புலியும், செண்டும்: ஆகுபெயர். செம்பியர் -சோழர்.
இண்டு - ஈசை. கழை - மூங்கில்.
(266)    
வருகுவர்மீண்டெனப் பாங்கி வலித்தல்:
    வருகுவர்   மீண்டு   எனப்  பாங்கி   வலித்தல்  என்பது, பாங்கி  தலைவர்
மீண்டுவருவர் எனக் கூறுதல்; வலித்தல் - கூறுதல்.


 தேர்த்தானை வாணன்தென் மாறைமின் னேயஞ்சல் செம்புருக்கி
வார்த்தா லனைய வழிநெடும் பாலை மடப்பெடைநோய்
பார்த்தா தவந்தவி பாதவ மின்மையிற் பைஞ்சிறகால்
போர்த்தாலு மஞ்ஞைகண் டும்போவ ரோநம் புரவலரே.

    (இ-ள்.) தேர்ப்படையையுடைய வாணன் தென்மாறை நாட்டிலிருக்கும் மின்னே,
அஞ்சலை;   செம்பையுருக்கி   வார்த்தா  
 லொத்த வெப்பத்தைத் தருகின்ற வழி
நெடிதாகிய பாலைநிலத்து மடப்பத்தொடு கூடிய பெடைமயிலினது
  வெயிலானாகிய
துன்பத்தைப் பார்த்து, அவ் வெயிற்றணிக்கின்ற மரங்களில் லாமையால், தனது பசி
சிறகினாலே   போர்த்து   அகவும்,  மயில்  
 கண்டும், நம்  புரவலர்  போவரோ,
மீண்டுவருவர், என்றவாறு.

    எனவே,   தலைவன்    ஏஞ்கால்    சுரத்து    நிகழுந்தன்மை     பாங்கி
யறிந்தாவாறென்னையெனின், தலைவன்  செல்லுங்கால் சுரம்  இத்தன்மையவென்று
சொல்லியவாற்றால் அறிந்திருந்தாளாகலின், இவ்வாறு கூறினாளென்க.

இவ்வாறு   சொல்லியதை   1`அரிதாய வறனெய்தி` என்னும்  கலித்தொகையானும்
உணர்க.
தானை - படை.  ஆதவம் - வெயில்.   பாதவம் - மரம்.   ஓகாரம் : எதிர்மறை.
(267)    

1. `களிற்று` என்பதும் பாடம்.