பக்கம் எண் :

கட
தஞ்சைவாணன் கோவை
228

 
     `தலைமகன்   நீடேனென்றல்`   என்பது   பிரிவுடன்படுத்தற்கு    உரித்து.

     `பாங்கி தலைவிக்கு வன் செலவுணர்த்தல்` என்பது பிரிவுடன்படுதற்கு உரித்து.

     `தலைமகளிரங்க`லும்     `கொடுஞ்சொற் சொல்ல`லும்,      `பருவங் கண்டு
பெருமகள் புலம்ப`லும்,   `மறுத்த`லும்,  `அவனவட் புலம்ப`லும்   ஆகிய ஐந்தும்,
பிரிவுழிக் கலங்கற்கு உரிய;

     `பாங்கி   கடுங்சொற்   சொல்ல`லும்,   `வருகுவர்   மீண்டெனப்   பாங்கி
வலித்த`லும்,   `பருவமன்று   வம்பென்ற`லும்,   `அவர்  தூதாகி வந்தடைந்ததிப்
பொழுதென்ற`லும் ஆகிய நான்கும் வன்புறைக்கு உரிய;

     `தலைமகளாற்றல்` என்பது வன்பொறைக்கு உரித்து;

     தலைமகன் மீண்டு  வருங்காலைப்  பாகனொடு  சொல்ல`லும், `மேகத்தொடு
சொல்ல`லும்,  `மேகத்தொடு சொல்ல`லும்  ஆகிய இரண்டும்  வருவழிக் கலங்கற்க
உரிய;

     `பாங்கி வலம்புரிகேட்டு  அவன் வரவறிவுறுத்தல்`  முதலிய ஐந்தும் வந்துழி
மகிழ்ச்சிக்கு உரிய.
(280)    
வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிதல் முற்றிற்று.
முதலாவது களவியல் முற்றிற்று.