|
|
அஃதாவது, தலைவன் தன் ஊர்க்குத் தலைவியை உடன் கொண்டு போதல். |
| 1`போக்கே கற்பொடு புணர்ந்த கௌவை மீட்சியென் றாங்கு விளம்பிய மூன்றும் வெளிப்படைக் கிளிவியின் வழிப்படும் தொகையே`
|
என்னும் சூத்திரத்தால், உடன்போக்கு மூவகைப்படும்.
|
| 1`போக்கறி வுறுத்தல் போக்குடன் படாமை போக்குடன் படுத்தல் போக்குடன் படுதல் போக்கல் விலக்கல் புகழ்தல் தேற்றலென் றியாப்பமை யுடன் போக் கிருநான்க வகைத்தே`
|
என்னுஞ் சூத்திரவிதியால், உடன்போக்கு எட்டு வகைப்படும்.
|
பாங்கி தலைவற்கு உடன்போக்குணர்த்தல்: |
பாங்கி தலைவற்க உடன்போக்கு உணர்த்தல் என்பது, காப்புக் கைம்மிகலால் உன் ஊர்க்கு உடன்கொண்டு போதியெனப் பாங்கி தலைவற்கு உரைத்தல். |
| மைந்நீர் நெடுங்கண் மடந்தை யுடன் தஞ்சை வாணன்வெற்பா செந்நீர் விழவணி நின்னகர்க் கேகொண்டு சேர்ந்தருண்மற் றிந்நீர்மை யல்லதொ ராறுமின் றாலிங்கெம் மையரென்றால் முந்நீ ருலகுங்கொள்ளார்விலை யாக முலையினுக்கே.
|
(இ-ள்.) தஞ்சைவாணன் வெற்பா! இவ்விடத்து எம் ஐயர் கருத்துச் சொல்லின் முலையினுக்கு விலையாக முந்நீர் சூழ்ந்த இவ்வுலகத்தையும் கொள்ளார்கள்; ஆதலால் குங்கும நீராடும் வசந்தத் திருவிழா அலங்காரத்தையுடைய நின் நகர்க்கு மையெழுதிய நீர்மையையுடைய நெடிய கண்ணையுடைய மடந்தையை உடன் கொண்டு சேர்ந்தருள்வாய்; இம்முறை யல்லாது நீ வரைவதற்கு வேறொரு வழியில்லை என்றவாறு. |
`வெற்பா இங்கெம்மையர்` எனவும், `முலையினுக்கு விலையாக முந்நீ ருலகுங் கொள்ளார்` எனவும், `நின்னகர்க்கு மைந்நீர் நெடுங்கண்` எனவும், `உடன்கொண்டு` எனவும் இயையும். மற்று: வினைமாற்று. செந்நீர் - குங்குமநீர். ஆறு - வழி. |
(305) |
|
1. அகப்பொருள் விளக்கம், வரைவியல், 10 : 11. |