|
|
கண்டோ ரயிர்த்தல்: |
கண்டோர் அயிர்த்தல் என்பது, வடிவின் மேம்பாட்டாற் கண்டோர் ஐயமுற்றுக் கூறுதல்.
|
| 1சையத் திரள்புயன் சந்திர வாணன் தனிபுரக்கும் வையத் துறைகின்ற மானிட ரோவன்றி வானவரோ நையப் படுமழல் வெஞ்சுரத் தூடு நடந்தவரென் றையப் படுவதல் லாலுண்மை சால அறிவரிதே.
|
(இ-ள்.) வருகின்றோர் உளம் நையப் பாலை அழல்படும் வெய்ய சுரத்தில் நடந்த இவர், மலைபோல் திரண்ட புயத்தை யுடையவனாகிய சந்திரவாணன் ஒப்பில்லாது காத்தளிக்கும் புவியின்கண் உறைகின்ற மானிடரோ! அல்லது, வானுலகின்கணுள்ளவரோ என்ற ஐயப்படுவதல்லாமல் உண்மையை மிகவும் அறியவரிது என்றவாறு.
|
சையம் - மலை. திரள்புயம்: வினைத்தொகை. புரத்தல் - காத்தல். வையம் - புவி. `அழல்படும்` என இயையும். சால - மிகவும்.
|
கண்டோர் காதலின விலக்கல்: |
கண்டோர் காதலின் விலக்கல் என்பது, கண்டோர் காதலினால் போக்கை விலக்கி, எம் பாடியில் தங்கிப்போம் என்று கூறுதல்.
|
கண்டோராவார் - பாலைநிலத்து எயிற்றியர். ஆடவர் கண்டோர் எனில் வருங்குற்றம் என்னையெனின், `கலந்துடன் வருவோர் புலம்பல் தேற்றல்` (செய். 347) என்னுங் கிளவிச் செய்யுளில், யான் தலைவனைக் கண்டேன், என் காதலி தலைவியைக் கண்டாள் என்பதனோடு மாறுபடுமென்று உணர்க. |
(319) |
| மாலுந் திருவு மெனவரு வீர்தஞ்சை வாணன்தெவ்வூர் போலுஞ் சுரமினிப் போகவெண் ணாது பொருப்படைந்தான் ஆலும் புரவி யருக்கனிக் கங்குல் அடற்கடமான் பாலுந் தசையுமுண் டேதங்கு வீரெங்கள் பாடியிலே.
|
(இ-ள்.) மாலும் திருவும் என்று சொல்ல வருவீர், தஞ்சைவாணன் பகைவரிருக்கும் ஊர்போலும் பாழாகிய சுரம் என்ற இவ்விடம் விட்டு அப்பாற் போகத்தகாது; ஆரவாரஞ் செய்யும் புரவிபூட்டிய தேரில் வரு அருக்கன் அத்த வெற்படைந்தான்; இருள் வருங்கால மாகிய இக்கங்குலில் போர் செய்யும் கடமான பாலும் தசையும் யாங்கள் தருதும், அதனையுண்டு எங்கள் பாடியில் தங்குவீர் என்றவாறு.
|
தெவ்வூர் பாழாய் மக்ளியக்கமின்றி யிருத்தலின், சுரம் உவமை யாயிற்று. `அருக்கன் பொருப்படைந்தான்` எனக் கூட்டுக. ஆலுதல் - ஆரவாரித்தல். அடல் - போர். |
(320) |
|
1. தொல். பொருள். களவியல் - 22. |