பக்கம் எண் :

தஞ்சைவாணன் கோவை
256

 
தான் அவள் என்னும் வேற்றுமையின்மையான்,`நம் தனம்` என்று  கூறினானென்க.
பொன் : ஆகுபெயர். நோய் - துன்பம் `வந்தனங்காண்` என்புழி, காண்:உரையசை.
(322)    
     இவற்றுள்,  `பாங்கி தலைவற்கு உடன்போக்கு உணர்த்த`லும்,   `தலைவிக்கு
உடன்போக்கு   உணர்த்த`லும்,   ஆகிய     இரண்டும்       போக்கறிவுறுத்தல்.

     `தலைமகன்  மறுத்த`லும்,  `தலைவி நாணழிவிரங்க`லும்  ஆகிய   இரண்டும்
போக்குடன்படாமை.

     `பாங்கி   தலைவனை   யுடன்படுத்த`லும்,    `தலைவி  கற்பின்  மேம்பாடு
பூண்முலைப் பாங்கி புகற`லும் ஆகிய இரண்டும் போக்குடன் படுதல்.

     `தலைவன்   போக்குடன்படுத`லும்,   `தலைவி  யொருப்பட்   டெழுத`லும்,
`பாங்கி   சுரத்  தியல்புரைத்துழித்  தலைமகள்  சொல்ல`லும்  ஆகிய   மூன்றும்
உடன்போக்குடன்படுதல்.

     `பாங்கி  கையடை  கொடுத்த`லும்,  `வைகிருள்   விடுத்த`லும்   `தலைமகன்
தலைமகளைச் சுரத்துய்த்த`லும் ஆகிய மூன்றும் போக்கல்.

     `தலைவன்   தலைவியை   அசைவறிந்திருத்த`லும்,   `கண்டோர்  காதலின்
விலக்க`லும் ஆகிய இரண்டும் விலக்கல்.

     `தலைவன்   தலைவியை   யுவந்தலர்சூட்டி   யுண்மகிழ்ச்    துரைத்த`லும்,
`கண்டோரயிர்த்த`லும் ஆகிய இரண்டும் புகழ்தல்.

     `கண்டோர்   தன்பதியணிமை  சாற்ற`லும்,   `தலைவன் தன்பதியடைந்தமை
தலைவிக் குணர்த்த`லும் ஆகிய இரண்டும் தேற்றல் எனக் கொள்க.

உடன்போக்கு முற்றிற்று.