பக்கம் எண் :

தஞ்சைவாணன் கோவை
267

 
வாணனது தென்மாறை  நாட்டிலிருக்கும் என்னுடைய வஞ்சிக்கொம்பு  போன்றவள்
போர் செய்யும்  சுடர்பொருந்திய  இலைபோலும்  வேலையுடைய ஒரு காளைபின்
போயினள்;     மீண்டு      வரக்கூறி       அருள்புரிவீராக       என்றவாறு.

இருமை - பெருமை.   முக்கோல் - திரிதண்டு. ஒழுக்கம் - ஆசாரம். இயைந்து -
பொருந்தி.  ஆறு - வழி.   `மீண்டுவரக்கூறல்`  அவாய்   நிலையான்    வந்தது.
ஒன்றுமுதல்எட்டளவும்   ஒழுங்காய்த்   தொகை   காட்டிவருதலால்   செய்யுட்கு
இஃதோர் அலங்காரந் தோன்றியவாறு காண்க.
(341)    
மிக்கோ ரேதுக் காட்டல்:
மிக்கோர்ஏதுக்   காட்டல்   என்பது,   செவிலி   வினாயதற்கு  மிக்கோர் அஃது
உலகியல்பென்று காரணமெடுத்துக்காட்டல்.

 இயங்கா வனமென் மகளொரு காளைபின் னேகினளென்
றுயங்கா தொழியஃ துலகியல் பாலுல வும்புயல்தோய்
வயங்கா டகமதில் சூழ்தஞ்சை வாணன் மணங்கமழ்தார்
புயங்காதல் கொண்டணைந் தாளய னார்தந்த பூமகளே.

(இ-ள்.) ஒருவருஞ்   சஞ்சரியாத   வனத்தில்   என்  மகள்  ஒரு    காளைபின்
ஏகினாளென்று வருந்தாதொழி; அவ்வாறு ஏகுதல் உலகவியல்பு;  யாங்ஙனமெனின்,
வானத்து   உலவும்   புயலைத்தீண்டி   விளங்கப்பட்ட   பொன்மதில்    சூழ்ந்த
தஞ்சைவாணனது மணங் கமழ் மாலையணிந்த புயத்தைக் காதல்கொண்டு
அயனார் படைத்த பூமிதேவியணைந்தாள் என்றவாறு.

இயங்கல் - சஞ்சரித்தல்.      ஏகினள் - போயினள்.      உயங்கல் - வருந்தல்.
வயங்கல் - விளங்கல்.     ஆடகமதில் - பொன்மதில்.    அயனார் - பிரமனார்.
பூமகள் - புமிதேவி.
(342)    
செவிலியெயிற்றியொடு புலம்பல்:
செவிலி   எயிற்றியொடு புலம்பல் என்பது, செவிலி பாலை நிலத்துப் பெண்ணொடு
புலம்பிக் கூறல்.

 செருமக ளேயும் புயத்தய லான்பின் செலவிடுத்தென்
ஒருமக ளேயென் றுனையயிர்த் தேன்புனை ஓவியம்போல்
வருமக ளேதஞ்சை வாணனொன் னார்துன்னும் வன்சுரத்தோர்
அருமக ளேயுரையாயவள் போன அதரெனக்கே.

(இ-ள்.) போர்மகள்  பொருந்திய புயத்தையுடைய அயலான் பின்னே போகவிடுத்து
உன்னை என் ஒப்பற்ற மகளேயென்று ஐயமுற்றேன்