பக்கம் எண் :

23. மீட்சி
272

 
அஃதாவது,  மீண்டு  வருதல்  செவிலி  புதல்வியைக்  காணாது மீண்டு வருதலும்,
உடன்போய  தலைவனும்  தலைவியும்  மீண்டு   வருதலும்  அடங்கப்பொதுப்பட
மீட்சி யென்று கூறினார்.

 1`தெளித்தல் மகிழ்ச்சி வினாதல் செப்பலென
வெளிப்பட வுரைத்த மீட்சிநால் வகைத்தே`
என்னுஞ் சூத்திர விதியால், மீட்சிநால்வகைப்படும்.
தலைவி சேணகன்றமை செவிலி, தாய்க் குணர்த்தல்:
 2ஏடார் மலர்க்குழல் வல்லியை யன்னையித்தீவினையேன்
நாடா இடமில்லை ஞாலத் தகல்வயின் நன்கமலக்
காடார் பழனக் கழனிநன் னாடு கடந்துதன்னூர்
வாடா வளமனை கொண்டுசென் றானொரு வள்ளலின்றே.
(இது பிறசெய்யுட் கவி)
(349)    
தலைவன் தம்மூர்சார்ந்தமை சாற்றல்:
தலைவன்  தம்மூர் சார்ந்தமை சாற்றல் என்பது, ஐம்பத்து நான்காநாள்,  தலைவன்
மீட்சியில் தலைவியது ஊரைத் தாம் சார்ந்தமை தலைவிக்குச் சாற்றல்.

 நினையான் எதிர்ப்பட்ட நீடிருங் குன்றிது நீகுடைந்த
சுனையா மதுமலர்ச் சோலைக ளாமுவை தூயவண்டல்
மனையா மிவையினி வாணன்தென் மாறையை வாழ்த்தல்ர்போல்
இனையா தெழுந்தருள் மானனையாய்நம் எழில்நகர்க்கே.

(இ-ள்.)  மானனையாய்!  நின்னை  யான் முன் எதிர்ப்பட்ட நீண்ட பெரிய  குன்று
இது;  நீ   குடைந்து   விளையாடிய   சுனையாம்   அது;   நி    விளையாடிய
மலர்ச்சோலைகளாம்  உவை;  மாசிலாத   வண்டலம்பாவை செய்து  விளையாடிய
சிற்றிலம் இவை; இன்று வாணன் தென்மாறையை வாழ்த்தாதவர்போல   வருந்தாது,
நமது எழிலையுடைய நகர்க்கு எழுந்தருள என்றவாறு.

    தான்   அவள்   என்னும்   வேற்றுமை யின்மையான், `நம் எழினகர்` எனக்
கூறினன். இனி - இன்று. இளையாது - வருந்தாது.
(350)    

1. அகப்பொருள் விளக்கம், வரைவியல் - 20.
2. அம்பிகாபதிகோவை - 408.