|
|
அஃதாவது, உடன்போய் மீண்டுவந்த தலைவன் தலைவியைத் தன் ஊர்க்குக் கூட்டிப்போய்த் தன் மனையின்கண் வரைந்து கோடல். |
| 1`வினாதல் செப்பல் மேவலென் றிறைவன் தனாதில் வரைத றான்மூ வகைத்தே`
|
என்னுஞ் சூத்திவிதியாற் தன்மனை வரைதல் மூவகைப்படும். |
நற்றாய் மணனயர் வேட்கையிற் செவிலியை வினாதல்: |
நற்றாய் மணனயர் வேட்கையிற் செவிலியை வினாதல் என்பது, தலைவி நற்றாய் தன்மனையின் மணஞ்செய்யும் விருப்பினாற் செவிலியை வினாதல். |
| தாமாக மேவினு நம்மனைக் கேவந்து தண்நிலம்பார் மரமா தினைமணஞ் செய்வதற் கேமரு வார்கமலப் பூமாது கேள்வன் புகழ்த்தஞ்சை வாணன் பொருப்பிலினி யாமா றுயிரனை யாய்சொல்வ மோவவ ரன்னையர்க்கே. |
(355) |
செவிலிக் கிகுளை வரைந்தமை யுணர்த்தல்: |
| என்னா மியம்புவ தியாய்க்கினி நாமன்னை யின்றுதம்மில் கொன்னாநித்திலக் கோதைநம் மாதைக் கொடிநெடுந்தேர்க் கன்னாடர் மண்கொண்ட வாணன்தென்மாறையிற் காதலர்தாம் நன்னாண் மணம்புணர்ந்த தாரென்று தூதர் நவின்றனரே. |
(இ-ள்.) அன்னையே! கொடிகட்டிய நெடுந்தேரையுடைய கன்னாடர் மண்ணைக்கொண்ட வாணன் தென்மாறை நாட்டில் காதலர் தாம் தம்மில்லத்துப் பெருமையார்ந்த முத்துமாலையைத் தரித்த நம்மாதை நல்லநாளிலே மணம் புணர்ந்தாரென்று வந்த தூதுவர் சொன்னார், இன்று நாம் ஆய்க்கு இயம்புவது இனி யென்னாம் என்றவாறு.
|
கொன் - பெருமை. நித்திலக்கோதை - முத்துமாலை. நவிலல் - சொல்லல். |
(356) |
வரைந்தமை செவிலி நற்றாய்க் குணர்த்தல்: |
| எனைக்கே ளிருநின் றியற்றவங் கேமண வின்பமெய்தி அனைக்கேண்மை நண்ணிய அண்ணல்பின் னாகநம் மன்னையின்றி மனைக்கே வருமென வந்தசொன்னார்தஞ்சை வாணன்வெற்பில் சுனைக்கேழ் நனைக்கழு நீர்க்குழ லாய்சில தூதரின்னே. |
|
1.அகப்பொருள் விளக்கம், வரைவியல் - 23. |